- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு வழங்காமல் புறக்கணிக்கிறது.
தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு வழங்காமல் புறக்கணிக்கிறது.
ஜெயராமன்
UPDATED: Aug 1, 2024, 6:07:34 AM
திருவாரூர்
கள் விற்பனை கூடாது என்கிற அரசின் கொள்கை முடிவை மாற்றலாகாது என்றாலும், பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் திருவாரூரில் பேட்டி,
திருவாரூர் தனியார் அரங்கில் திருவாரூர் வர்த்தகர்களின் பாதுகாப்பு சங்கம் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது.
எர்ணாவூர் நாராயணன்
மத்திய அரசுக்கு தமிழ்நாடு வாயிலாக அதிக வரி வருவாய் கிடைத்து வருகறது. ஆனால், தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு வழங்காமல் புறக்கணித்து கொண்டுள்ளது.
இங்குள்ள வரிவருவாயை வைத்து மிகவும் சிக்கலான சூழ்நிலையிலும் மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றி கொண்டுள்ளது.
மத்தியில் ஆளும் அரசு தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கன நிதியை வழங்க வேண்டும்.
கள்ளுக்கடையை திறக்கக்கூடாது என அரசு கொள்கை முடிவாகும். காமராஜர் காலத்திலிருந்து இந்த கொள்கை முடிவு இருந்தும் கருணாநிதி காலத்தில் கள்ளுக்கடை திறக்கப்பட்டது.
கள் விற்பனையால் ஏற்பட்ட பிரட்சனைகள், கிராமப்புறங்களில் போதைக்காக மருந்துகளை கலந்து விற்றதால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக கள் விற்பனை தடை செய்யப்பட்டது.
கள்
இப்போது சில அமைப்புகள் கள்ளு கடையை மீண்டும் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். கள் விற்பனை கூடாது என்கிற அரசின் கொள்கை முடிவை மாற்றலாகாது என்றாலும், பனை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது .
20 வருடத்துக்கு முன்னதாக கள் வேண்டும் என்பதற்காக திருவாரூர் மற்றும் சேலத்தில் மாநாடு நடத்தப்பட்டது. கள் விற்பனை குறித்து மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட்டும் வலியுறுத்தியுள்ளது.
எனவே, அரசு இதை கவனத்தில் எடுத்து பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பனைத்தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
மின்கட்டண உயர்வு
மின்கட்டண உயர்வு மக்களை பாதிக்கக்கூடியதாகும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை முறையாக ஒதுக்கினால் மின்கட்டணம் உயரப்போவதில்லை.
விலைவாசியும் உயராது. நமது வருமானத்தை எடுத்துக்கொண்டு மத்திய அரசாங்கம் தர மறுக்கிறது. நாட்டின் வளர்ச்சி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை கொடுக்க இவ்வாறான சில உயர்வுகளை செய்தால் மட்டுமே முடியும் என்பதால் அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என தெரிவித்தார்.