- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆட்சியரை மீறி ஓய்வூதியத்திற்கு பரிந்துரைத்த பிடிஓ, மேனேஜர், கிளார்க் சஸ்பெண்ட்.
ஆட்சியரை மீறி ஓய்வூதியத்திற்கு பரிந்துரைத்த பிடிஓ, மேனேஜர், கிளார்க் சஸ்பெண்ட்.
ராஜ்குமார்
UPDATED: Jul 31, 2024, 3:08:13 PM
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்
சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றியவர் லோகிதாசன்.
அவர் கடந்த 2004 ஆம் ஆண்டு சோழவரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இதையடுத்து சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவர் சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதியிடம் தனக்கு ஓய்வூதியத்துக்கான கருத்துக்களை சென்னை ஏஜி தலைமை கணக்கு அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
Thiruvallur News Today Live
இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் கருத்துக்கள் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து லோகிதாசன் ஓய்வூதிய பணப் பலன் பெற தகுதி இல்லை என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெளிவாக குறிப்பிட்டு சோழவரம் வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இருப்பினும் இதை பொருட்படுத்தாத வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, ஓய்வு பெற்ற மேலாளர் லோகிதாசனுக்கு ஓய்வூதியம் பெற்று தர முயற்சிகள் எடுத்துள்ளார்.
ALSO READ | தீரன் சின்னமலை வரலாறு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
இது பற்றி அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது கடிதத்தை புறந்தள்ளிவிட்டு நடவடிக்கை மேற்கொண்ட சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி, அவருக்கு உடந்தையாக இருந்த மேலாளர் சுப்புதாஸ், கிளார்க் மணிமாறன் மூவரையும் அரசாணை 39 ன் படி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஆட்சியரை சந்தித்து மூவரும் காலில் விழுந்து எங்களை மன்னித்து விடுங்கள் என கெஞ்சியுள்ளனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர், என் காலில் நீங்கள் விழுந்ததை போல மேல் அதிகாரி காலில் நான் விழ வேண்டுமா? என வசைப்பாடி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
Tiruvallur District News
மேலும் ஓய்வூதியத்துக்கு லோகி தாசன் தகுதியானவர் தான் அவருக்கு ஓய்வூதியம் பெற்று தரலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கத்தின் நிர்வாகியும் பல புகார்களுக்கு உள்ளான் வட்டார வளர்ச்சி அலுவலர் மணி சேகர், பார்த்தசாரதியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஓய்வூதிய கருத்துரைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி ,மணி சேகர் இருவரும் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.