புவனகிரி அருகே அரசு பேருந்து லைட் எரியாமல் இயக்கப்பட்ட அவலம் , அரசின் புதிய ஐடியா .

சண்முகம்

UPDATED: Aug 5, 2024, 5:20:40 AM

கடலூர் மாவட்டம்

புவனகிரி அருகே கரைமேடு பகுதி, மருதூர் செல்லும் சாலையில் வடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றது அரசு பேருந்து. அந்த அரசு பேருந்துக்கு உள்ளே எந்த விதமான லைட்டும் எரியாததால் பேருந்து முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. 

பேருந்து உள்ளே பயணிகள், நடத்துனர் மற்றும் ஓட்டுநரும் இருந்தனர். பேருந்து மெல்ல சென்றுக் கொண்டிருந்தது பேருந்துக்கு முன்பாக இருசக்கர வாகனம் ஒன்று வழிகாட்டிக் கொண்டு, இருசக்கர வாகனத்தின் வெளிச்சத்தில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதனை அவ்வழியாக சென்ற செய்தியாளர் ஒருவர் படம்பிடித்தவாறு சென்றார். அந்த பேருந்து கொளக்குடி பேருந்து நிறுத்த பகுதிக்கு வந்த போது பேருந்து நின்றது‌. நிறுத்தப்பட்ட பேருந்திலிருந்து பயணிகள் இறங்கினர்.

அரசு பேருந்து

அப்போது பேருந்து ஓட்டுனர் மற்றும் பேருந்து ஓட்டுனரை சார்ந்த மற்றவர்கள் என பலர் அந்த செய்தியாளரிடம் நீ எப்படி இதை வீடியோ எடுக்கலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு செய்தியாளரும் பேருந்தில் சேவை குறைபாடு லைட் எரியவில்லை இதை சுட்டிக்காட்டவே நான் வீடியோ எடுக்கிறேன் இதை எப்படி நீங்கள் தடுக்க முடியும் என அரசுப் பேருந்து ஓட்டுனரிடம் கேட்க நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

Latest Cuddalore News & Live Updates

வீடியோ எடுத்த செய்தியாளரை பேருந்து ஓட்டுனர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மிரட்டல் விடுத்தவாறு சென்றனர். இது குறித்து வேதனை அடைந்த செய்தியாளர் மருதூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அரசு பேருந்துகளை எவ்வாறு நம்பி பயணம் செய்வது என பலரும் கலக்கம் அடைந்து வருகின்றனர். மேலும் புவனகிரி பகுதியில் அரசு பேருந்து லைட் எரியாமல் இயக்கப்பட்ட இந்த சம்பவம் கண்டு அரசின் நவீன மாடல் பேருந்து சேவை இதுதானா என பலரும் வேதனை அடைந்துள்ளனர்.

 

VIDEOS

Recommended