வண்ணாரப்பேட்டை கே.ஜி.எஃப் துணிக்கடையில் பணம் எடுத்ததாக இளைஞர் தாக்கப்பட்ட வழக்கில் கடையின் விக்கி என்ற விக்னேஸ்வரன் கைது.
நெல்சன் கென்னடி
UPDATED: May 2, 2024, 1:44:11 PM
சென்னை வண்ணாரப்பேட்டை என். என். கார்டன் மூன்றாவது தெருவில் விக்கி என்ற விக்னேஸ்வரன் கேஜிஎப் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்
இந்த கடையில் குழந்தைத் தொழிலாளர்களை வைத்துள்ளதாக கடந்த வருடம் வழக்குப்பதியப்பட்டது
அதேபோல் எதிர் கடையில் பெண்மணியை அவதூறாக பேசிய வழக்கில் விக்கி மீது வழக்கு பதியப்பட்டது இதுபோன்று பல்வேறு வழக்குகள் விக்கியின் பேரில் உள்ளது
இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி கடையில் வேலை செய்து நின்ற ரிஸ்வான் வயது 19 என்ற இளைஞர் இவரது கடையில் வேலை செய்து பின்னர் நின்று விட்ட நிலையில் 17ஆம் தேதி வண்ணாரப்பேட்டை பகுதிக்கு வந்து அவரை கடையில் உள்ள ஊழியர்கள் பார்த்து கடைக்கு வரவழைத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் திருடி உள்ளதாக கடையில் வைத்து இரண்டு நாட்கள் தாக்கி அவர் குடும்பத்தாரிடம் 30 ஆயிரம் கூகுள் பே மூலம் பெற்றுக்கொண்டு ஒப்படைத்தனர்
இந்நிலையில் பலத்த காயமடைந்த ரிஸ்வானை உறவினர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்
இந்நிலையில் அன்றே வண்ணாரப்பேட்டை போலீசார் விக்கியின் தூண்டுதலின்படி தாக்கிய சசிகுமார் என்ற கருப்பன் மற்றும் சச்சின் கைது செய்யப்பட்டனர்
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான விக்கி என்ற விக்னேஷ் தலைமறைவானார் அவரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில் அவர் youtubeபில் ஏற்றிய வீடியோவில் கோயம்புத்தூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது
அதன் பெயரில் போலீசார் கோயம்புத்தூர் சென்று விக்கியை கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.