• முகப்பு
  • தமிழ்நாடு
  • அபராதம் செலுத்தும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு சிறை இலங்கை கோர்ட்டு உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி.

அபராதம் செலுத்தும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு சிறை இலங்கை கோர்ட்டு உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி.

கார்மேகம்

UPDATED: Sep 6, 2024, 4:15:10 PM

தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை ரூபாய் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் அபராதம் செலுத்தும் வரை சிறையில் அடைக்கவும் இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

( மீனவர்கள் சிறையில் அடைப்பு )

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 26- ந்தேதி விசைப் படகு ஒன்றில் 8 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்

இந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் கோர்டில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர்.

இந்த 8 மீனவர்களும் நேற்று மன்னார் கோர்ட்டில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர் அப்போது நீதிபதி இந்த 8 மீனவர்களில் 5 மீனவர்களுக்கு இலங்கை பணம் தலா ரூ. 50 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தும் கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை என்றும் தீர்ப்பளித்தார் 

Latest Srilanka News

2- வது முறையாக பிடிபட்ட தாக 2 மீனவர்களுக்கு இலங்கை பணம் ரூ.50  ஆயிரம் அபராதம் விதித்தும் படகோட்டிக்கு  ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனை என்றும் தீர்ப்பளித்தார்

அபராதம் கட்டப்படும் வரை 8 பேரையும் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது

இலங்கை கோர்ட்டுகள் தமிழக மீனவர்களை விடுவிக்காமல் மீண்டும்  சிறையில் அடைத்து வருவது ஒட்டு மொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended