காண்டாமிருக கொம்புடன் தங்கியிருந்த 5 பேர்.

ரமேஷ்

UPDATED: Aug 27, 2024, 6:18:41 PM

கும்பகோணம்

ஒரு கும்பல் காண்டாமிருக கொம்பை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை மற்றும் ராமநாதபுரம் வனத்துறை தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக கும்பகோணம் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வனச்சரகர் பொன்னுசாமி தலைமையில் வனத்துறைனர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது திருநாகேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதியில் காண்டாமிருக கொம்பை விற்பனை செய்வதற்காக அந்த கும்பல் தங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் காண்டாமிருக கொம்புடன் தங்கியிருந்த 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த கலியபெருமாள், திருவாரூரை சேர்ந்த ஹாஜாமைதீனும், கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில், தென்னரசு, விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 35 லட்சம் மதிப்பிலான காண்டா மிருக கொம்பு மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

VIDEOS

Recommended