- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி இரண்டு பேர் பலி. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கினர்
ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி இரண்டு பேர் பலி. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கினர்
சசி குமார்
UPDATED: Sep 22, 2024, 8:39:27 AM
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் அருகே உத்தரப்பள்ளி என்ற இடத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான ஆண், பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை பணிக்கு அழைத்துச் செல்லவும், பணி முடித்து வீட்டுக்கு கொண்டு சென்று விடவும் தொழிற்சாலையின் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன,
நல்லிரவுவில் பணிக்கு செல்வதற்காக தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சென்ற பேருந்து கெலமங்கலம் நான்குரோடு சந்திப்பருகே சென்று கொண்டிருந்தபோது கெலமங்கலம் அருகே உள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் குமார், கணேஷ் இருவரும் இரு சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது தனியார் தொழிற்சாலை பேருந்து இவர்கள் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
Breaking News Today In Tamil
மற்றொரு நபர் பலத்த காயமடைந்து நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டார்.
இரண்டு பேர் இறந்த சம்பவம் அறிந்த அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து விபத்துக்குள்ளான தனியார் தொழிற்சாலை பேருந்தும் மற்றும் அந்த வழியாக வந்த அதே தொழிற்சாலை சேர்ந்த ஆறு பேருந்துகளை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போக்குவரத்து பாதிப்படைந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கட்டுப்படுத்த முயன்றனர்
ALSO READ | கோத்தகிரியில் யானை தாக்கி பெண் பலி.
Latest Krishnagiri News
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.
இறந்த இரண்டு பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு இடையேஇறந்தவர் குடும்பத்திற்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும்உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.