தனியாருக்கு தாரை வார்க்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக வழித்தடங்கள் பயணிகள் அவதி.

ராஜ் குமார்

UPDATED: Sep 20, 2024, 9:25:29 AM

தென்காசி மாவட்டம்

சுரண்டை, வீகேபுதூர், சாம்பவர்வடகரை, சேர்ந்தமரம், வீரசிகாமணி, பகுதியை சேர்ந்த பஸ் பயணிகளில் சுமார் 200 பேர் தினமும் விழுப்புரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், சென்னை என சென்று வருகின்றனர் இவர்களது வசதிக்காக கடந்த 1989ம் வருடம் டாக்டர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் இருந்து செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் 290 இயக்கப்பட்டு வருகிறது.

இப்பேருந்தில் பயணிக்கும் சுரண்டை பயணிகளுக்கு சென்னைக்கு நேரடி பயண சீட்டு வழங்க மறுத்து சங்கரன்கோவில் வரை ஒரு பயண சீட்டும் பின்னர் அடுத்த பயண சீட்டும் வழங்கி நேரடி பயணிகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது இல் வழித்தடத்தில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

Breaking News Today in Tamil 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் இந்த வழித்தடத்தில் புதிய வெள்ளை வண்ண பேரூந்து தடம் எண் 290 மாலை 6-00 மணிக்கும் தடம் எண் 290UD மாலை 7-00 மணிக்கும் நல்ல வசூலில் இயக்கப்பட்டு வந்தது

ஆனால் சில நாட்களில் வெள்ளை வண்ண பேருந்து நிறுத்தப்பட்டு பழுதடைந்த சரிவர பராமரிப்பு இல்லாத பழைய பச்சை வண்ண பேருந்து இயக்கப்பட்டதால் இரண்டு பேருந்தில் ஒரு பேருந்து நிறுத்தப்பட்டு ஒரு பேருந்து மட்டும் தொடர்ந்து பழுதடைந்த பச்சை வண்ண பேருந்தாக இயங்கியது.

Latest Thenkasi News Today In Tamil

அதுவும் சரியான நேரத்தில் இயக்கப்படாமலும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டதாலும், சுரண்டையில் இருந்து சென்னைக்கு நேரடி பயண சீட்டு வழங்கப்படாததாலும் பயணிகள் வரத்து குறைவு என கணக்கிடப்பட்டு தற்போது மீண்டும் இரண்டு பேருந்துகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது ‌

இதனால் சுரண்டையில் இருந்து சென்னை மார்க்கமாக பயணிக்கும் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் ஊரின் வளர்ச்சி மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளையும் நிறுத்துவது பயணிகளை சிரமத்தில் உள்ளாக்குவதுடன் தனியார் ஆம்னி பஸ்களுக்கு தாரை வார்ப்பது போல் உள்ளது.

சுரண்டை வளர்ந்து வரும் வணிக நகரம் என்பதுடன் இதனை பயன்படுத்தி சுரண்டையில் இருந்தும் சுரண்டை வழியாகவும் தற்போது தினமும் 12 முதல் 15 தனியார் ஆம்னி பேருந்துகள் நல்ல வசூலில் இயக்கப்படுகின்றன பயணிகள் அடர்வு அதிகமாக இருக்கும் நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது டிக்கெட் கட்டணமும் மூன்று மடங்கு அதிகரிக்கப்படுகிறது

மேலும் இதே போன்று சுரண்டை வழியாக பெங்களூர் மற்றும் திருப்பதிக்கு இயக்கி நிறுத்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும்.

SETC

ஆகவே சம்பந்தப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுரண்டையில் இருந்து சென்னைக்கு இயக்கி நிறுத்தப்பட்ட இரண்டு பேருந்துகளையும் நவீன புதிய ரக பச்சை வண்ண பேருந்து அல்லது வெள்ளை வண்ண பேருந்தாக இயக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி கோட்ட பேருந்துகளை இயக்க வழி விட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended