- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காப்பு காட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு.
காப்பு காட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு.
அஜித் குமார்
UPDATED: May 1, 2024, 7:19:14 PM
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தில் ஆத்துரை - பெரணம்பாக்கம் சாலையில் சுமார் 1500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காப்பு காடு உள்ளது.
இந்த காப்பு காட்டில் மான், மயில், பல வகையான பாம்புகள், குரங்கினங்கள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களும்,
பல அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் அதிக அளவில் காணப்பட்டன.
தற்போது கோடை காலம் என்பதால் அந்த பகுதிகளில் வெப்பம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.
இதனால் ஒதுக்குப்புறமாக அந்த பகுதியில் ஒதுங்கிய மது போதை ஆசாமிகள் மற்றும் மர்ம நபர்கள் காற்றின் மைய பகுதியில் வைத்த தீயினால் காப்புக்காடு முழுவதும் தீ மள மள வென கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
இதனால் காட்டில் வாழும் சில அரிய வகை உயிரினங்கள் அதிக வகை மூலிகை செடிகள் மரங்கள் ஆகியவற்றை தீ யில் எரிந்து நாசமாகி வருகிறது.
அந்த காப்பு காட்டில் வாழும் பறவை இனங்கள் தங்குவதற்கு இடமில்லாமல் அங்கும் இங்குமாக பறப்பதை நம்மால் காண முடிகிறது.
இப்படி கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் கடந்த இரண்டு மணி போராடி வருகின்றனர்.
மேலும் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.