பாளை சிறையில் கைதி தாக்கி வார்டன் காயம்.
முகேஷ்
UPDATED: Sep 13, 2024, 10:13:17 AM
பாளையங்கோட்டை மத்திய சிறை
திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற பாளையங்கோட்டை மத்திய சிறை உள்ளது.
இங்கு இரண்டாவது கோபுரம் பிளாக்கில் இன்று காலை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற வார்டன் பணி செய்து கொண்டிருந்தார்.
Latest Tamil Crime News
அப்போது, மதுரையைச் சேர்ந்த தண்டனை கைதி மகேந்திரன், சக கைதியான ராஜேஷை அடித்து, உதைத்துள்ளார். அதை தடுத்து சமாதானப்படுத்த சென்ற மகேந்திரனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் மகேந்திரன் காயமடைந்தார். அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பெருமாள் புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.