ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி 15க்கும் மேற்பட்டோர் காயம்.
அந்தோணி ராஜ்
UPDATED: Sep 27, 2024, 7:11:50 PM
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்திநகர் பகுதியில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர், பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மம்சாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மம்சாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் மினி பேருந்து 35 பேருக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
விபத்து
மினி பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விபத்தில் நிதீஷ்குமார்,ஸ்ரீதர், வாசு என்ற மூன்று பள்ளி மாணவர்களும் சதீஷ்குமார் என்ற ஒரு கல்லூரி மாணவன் உட்பட 4 பேர் பலியாக்கினர்.
மேலும் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.
இந்நிலையில் மம்சாபுரம் மற்றும் காந்திநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் பகுதியில் பள்ளி நேரங்களில் அதிக அளவு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 28-09-2024
Latest Crime News In Tamil
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கு காரணமான மினி பேருந்து ஓட்டுனர் நித்திசை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காலாண்டு தேர்வு முடிந்து இன்று பிற்பகல் முதல் விடுமுறை என்றிருந்த நிலையில் மூன்று பள்ளி மாணவர்களின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.