• முகப்பு
  • இலங்கை
  • பணத்திற்காக வட்ஸ்அப் கணக்குகளை தடை செய்து இணையத்தள மோசடிகள் 

பணத்திற்காக வட்ஸ்அப் கணக்குகளை தடை செய்து இணையத்தள மோசடிகள் 

ஏ. எஸ். எம். ஜாவித்

UPDATED: Dec 19, 2024, 11:56:29 AM

தற்போதைய நவீன தொழிற்பங்கள் கூடக் கூட அவற்றைப்பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் மோசடிப் பேர் வழிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

வட்ஸ்அப் ஊடகாக தொலைபேசி அழைப்புக்களை எடுத்து அவர்களுடன் சாதுர்யமாக கதைத்து ஒருவருடைய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு இலக்கங்கள், இரகசிய எண்கள் போன்ற வற்றையும் பெற்றுக் கொண்டு இந்த மோசடிகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு முக்கிய காரணம் பணம் பறித்தலாகும். வட்ஸ்அப் பாவிப்பவர்களின் விபரங்களை அவர்கள் அறிந்து கொண்டு அவர்கள் எவ்வாறான விடயங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்களோ அவற்றை அடையாளம் கண்டு அந்த விடயங்களில் கதைப்பதாக கூறி தமது மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக தொலைபேசியில் கதைக்கும்போது பரீட்சையம் இல்லாத அல்லது அறிமுகம் இல்லாதவர்கள் அழைத்தால் முடியுமானவரை அவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் குறிப்பாக உங்கள் கையடக்கத் தொலைபேசியில் புதிய அப் அல்லது புதிதாக அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறி கதைத்து உங்களிடம் இருந்து OTP எனும் இரகசிய இலக்கத்தை பெற்றுக் கொண்டு உங்கள் வங்கிக் கணக்குளை மோசடி செய்யலாம் அல்லது வட்ஸ்அப் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நான் ஒரு பிரச்சினையில் இருப்பதாகவும் உடன் பணம் தேவை என்றும் அதனை மறுநாள் திரும்பத் தருவேன் என்று கூறி வங்கிக் கணக்கு ஒன்றை அனுப்புவார்கள் அவ்வாறு அவர்கள் அனுப்பும் வங்கிக் கணக்கிற்கு உங்களில் அனுதாபம் உள்ளவர்கள் பணம் அனுப்பினால் அவர்கள் மறு நிமடத்தில் அதனை தமது வெளிநாட்டு கணக்கு ஒன்றிற்கோ அல்லது வேறு ஒரு கணக்கிற்கோ மாற்றி விடுவார்களாம்.

இவ்வாறான பல செயற்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்த விடயத்தை பொலிஸில் முறைப்பாடு செய்தாலும் அவர்களை இனங்கண்டு பிடிப்பது என்பது முடியாத விடயமாகவே இருக்கின்றது.

கடந்த 15ஆம் திகதி சிரேஷ்ட ஊடகவியலாளர்களான ஏ.எஸ்.எம்.ஜாவித் மற்றும் அஹமட் முனவ்வர் ஆகியோரின் வட்ஸ்அப் கணக்குகள் கெக் செய்யப்பட்டது.

எனக்கு நடந்த விடயமும் இதுதான் 

கடந்த 2024.12.15 ஆம் திகதி பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் பாணந்துறை சரிக்க முல்லையில் சுகவீனமுற்று இருக்கும் எனது நண்பர் ஒருவருடன் சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்கும்போது எனது கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்அப் அழைப்பு ஒன்று வந்தது அந்த அழைப்பு சிவப்பு நிற அடையாளத்துடன் ஒரு கம்பனியின் பெயர்போல் வந்தது நானும் அந்த அழைப்பை கதைப்போமா அல்லது விடுவோமா என்று நினைத்து வெளிநாடுகளிலும் ஒருசில நண்பர்கள் இருப்பதால் அவர்களில் யாராவது ஒருவர் எடுக்கின்றார் என்று நினைத்தே அதனை நான் ஓன் செய்தேன்.

அப்போது குறித்த அழைப்பை எடுத்தவர் வெளிநாடுகளில் கதைக்கும் பாணியில் ஆங்கிலத்தில் நான் UK யில் இருந்து கதைப்பதாகவும் நாங்கள் ஒரு சூம் மீற்றிங் செய்ய இருப்பதாகவும் அதில் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்று கேட்டார் அதற்கு நான் என்ன விடயம் சம்பந்தமாக என்று கேட்டேன் அதற்கு அவர் பலஸ்தீன் சம்பந்தமாக என்று கூறினார் நானும் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் சரி என்று கூறி உங்கள் சூம் ஐடியை அனுப்புங்கள் என்று கூறி தொலைபேசியை நிறுத்தலாம் என்று நினைத்தபோது அவர் கூறினார் உங்களுக்கு எமது ஐடியை அனுப்பி உள்ளேன் என்றார் நான் பார்க்கும்போது அது வரவில்லை என்றேன் இல்லை பாருங்கள் என்றார் அதில் ஆறு இலக்கங்கள் வந்திருந்தன. அதை அவர்கேட்டார் நானும் தெரியாத்தனமாக அதை அவருக்கு சொல்லி விட்டேன் அவர் அதனை இரண்டு முறை கேட்டார்.

 அதன் பிறகு நீங்கள் சூம் மீற்றிங் அன்று மாலை 6.00 மணிக்கு இருப்பதாகவும் அதற்கு தயாராகுங்கள் என்று கூறிவிட்டு தொலைபேசியை நிறுத்தி விட்டார். அதன் பின்னர் சில நிமிடங்களில் மீண்டு அதே அழைப்பு வந்தது நான் அழைப்பை ஓன் செய்தபோது அந்த நபர் நீங்கள் சூம் மீற்றிங்கிற்கு ரெடிதானே என்றார் நானும் ஆம் என்று கூறியதும் அவர் தொலைபேசியை நிறுத்தி விட்டார்.

அதன் பின்னர் நான் பாணந்துறையில் இருந்து வீடு வந்து சுமார் 6.40 மணியளவில் எனது தொiபேசியை பார்த்தபோது எனது வட்ஸ்அப் செயழிழந்து எந்தவொரு தகவலும் அதில் இல்லை எனது புதல்வர் சொன்னார் உங்கள் வட்ஸ்அப் முற்றாக அழிந்துவிட்டது யாரோ கெக் செய்து விட்டார்கள் என்றார். அதன் பிறகுதான் நடந்த விடயத்தை நான் கூறினேன்.

இவ்வாறான நிலையில் எனக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பதட்டமாக இருந்தது. இதற்கு முன் எனது முக்கியமான நண்பர் ஒருவருக்கும் இவ்வாறு நடந்திருந்து. அவரிடம் விடயத்தை தொலைபேசியில் கூறினேன் அவர் சொன்னார் நீங்கள் பதட்டப்பட வேண்டாம் உடநடியாக பேஸ்புக்கில் எனது வட்ஸ்அப் கெக் செய்யப்பட்டு விட்டதாகவும் அதிலிருந்து ஏதாவது கேட்டால் அதற்கு ஒருவரும் பதில் அழிக்க வேண்டாம் என ஒரு அறிவித்தலை கொடுத்து விட்டு அதே அறிவித்தலை வேறு ஒரு வட்ஸ்அப் இலக்கத்தில் இருந்து உங்களின் ஏனைய வட்ஸ்அப் குழுமத்திற்கும் உங்களோடு தொடர்புள்ள அனைவருக்கும் தகவல் கொடுங்கள் என்றார். நான் அதன்படி செய்து விட்டு தொலைபேசி மூலமும் முக்கியமானவர்களுக்கு முடியுமானவரை உடன் தகவல்களை வழங்கினேன்.

அதற்கு இடையில் நான் தகவல் அனுப்புவதுபோல் எனது வட்ஸ்அப் நண்பர்கள் பலருக்கு நான் ஒரு பிரச்சினையில் இருப்பதாகவும் எனக்க உடன் பண உதவி செய்யுமாறும் நான் அதனை மறுநாள் உடன் திரும்பி தருவதாகவும் கேட்டு செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்த பலர் அதிர்ச்சியடைந்து எனக்கு தொலபேசி அழைப்புக்களை எடுத்துக் கொண்டே இருந்தனர். சிலர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு அவர் கம்பளையில் உள்ள P.m. farsan , people bank , gampola branch- 0182001900744472 இலக்கத்திற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

ஒரு நபர் தனக்கு ஒன் லைன் பேங்சிஸ்டம் இல்லை என்று தகவல் அனுப்ப அவர் தனக்கு ஸ்கிறீன் சொட் அனுப்புமாறு தகல் அனுப்பியுள்ளார். சுமார் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் வரை உதவி கேட்டுள்ளார்.

16 ஆம் திகதி காலை 8.00 மணிவரை எனது வட்ஸ்அப் கணக்கை குறித்த நபர் அவருடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார். எனது குடும்ப உறுப்பினர்களின் வட்ஸ்அப் குறூப்பிற்கு நான் அட்மினாக இருக்கின்றேன். அந்த குறூப்பில் விடயம் தொடர்பாக எனது தகவலை எனது மணைவியின் வட்ஸ்அப்பில் இருந்து தகவல் போட்டபோது அவர் அதனை உடனுக்கு உடன் டிலீற் செய்து கொண்டே இருந்தார்.

இதேபோல் சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹமட் முனவ்வரின் வட்ஸ்அப் கணக்கும் 15ஆம் திகதி 6.00 மணியளவில் கெக் செய்யப்பட்டிருந்தது.

இதேபோல் எனது உறவினரா ஆசிரியர் ஒருவருடைய தொலைபேசிக்கு கடந்த 16ஆம் திகதி மாலை அழைப்பு எடுத்து உங்கள் மொபிடல் தொலைபேசி சிம் யாருடைய பேரில் இருக்கின்றது அது தொடர்பாக விபரங்களை தருமாறு இரு பெண்கள் சிங்கள மொழியிலும் கொச்சைத் தமிழிலும் கேட்டுள்ளனர் அதற்கு அவர் நீங்கள் மொபிடல் கம்பனியா என்று கேட்டதற்கு இல்லை எங்களுக்கு தேவை எடுக்கச் சொல்லி இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர் அதற்கு அந்த ஆசிரியர் நீங்கள் மொபிடல் கம்பனியில் கேழுங்கள் என்று கூற அவர்கள் தொலைபேசி அழைப்பை நிறுத்தி விட்டார்களாம்.

இவ்வாறு மோசடிகள் அதிகரித்துள்ளதால் அனைவரும் மிக அவதானமாக இருக்க வேண்டும். அவர்கள் வழங்கும் கணக்கிலக்கங்களும் பிழையானவையாகவும் இருக்கின்றன. எனினும் இவ்வாறான செயற்பாடுகள் நமது இயல்பு நிலையை குழப்பி பிரச்சினைக்குள்ளாக்கும் செயற்பாடுகளாகவும் அதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

 

VIDEOS

Recommended