கோவூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு புதிய அரசு பேருந்து வழித்தடம் துவக்கம்.

ஆனந்த்

UPDATED: Aug 19, 2024, 6:43:24 PM

சென்னை

அடுத்த கோவூர் ஊராட்சியில் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ 45 லட்சம் செலவில் அரசு பேருந்து பணிமனை திறப்பு விழா மற்றும் 6 புதிய பேருந்து வழித்தடங்கள் துவக்க விழா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ,சிறு ,குறு ,நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

கோவூர் To கிளாம்பாக்கம் 

குறிப்பாக கோவூர் பணிமனையில் இருந்து கிளாம்பாக்கம் பல்லாவரம்,பிராட்வே ,போரூர்,சோமமங்கலம் மற்றும் நந்தம்பாக்கம் உள்ளிட்ட 6 வழி தடங்களில் பேருந்துகள் இங்கு இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

பேருந்து துவக்கி வைத்த அமைச்சர்கள் கலெக்டர் உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்களோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டனர்.

Latest Chennai District News 

குறிப்பாக கோவூரில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல பொதுமக்கள் அவதி பட்ட நிலையில் தற்போது பொதுமக்கள் கோரிக்கைகைகய் ஏற்று இங்கிருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அமைச்சர் மற்றும் அரசுக்கு பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

 

VIDEOS

Recommended