• முகப்பு
  • குற்றம்
  • கஞ்சா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை.

கஞ்சா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை.

ஆனந்த்

UPDATED: Oct 10, 2024, 6:30:43 AM

சென்னை

வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் என்கிற தக்காளி பிரபா (25) கோயம்பேடு காவல்நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது போலீஸார் கைது செய்தனர்.

அவருடன் கூட்டாளிகள் 4 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 21.3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மதுரவாயல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை போதைப்பொருள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

Latest Crime News In Tamil

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, பிரபாகரனுக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் பிரபாகரனுடன் கைது செய்யப்பட்ட மற்ற 4 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்து சட்டப்படி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended