- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பருவ மழைக்கு முன்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் தூர்வாரப்படுமா ?
பருவ மழைக்கு முன்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் தூர்வாரப்படுமா ?
கார்மேகம்
UPDATED: Aug 12, 2024, 9:25:31 AM
இராமநாதபுரம்
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் ஷட்டர் பழுது காரணமாக மதகு
வழியாக தினமும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது மேலும் பருவ மழைக்கு முன்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
( பெரிய கண்மாய்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததோடு வைகை தண்ணீரும் பலமுறை வந்தது இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பின
குறிப்பாக ராமநாதபுரத்தின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான பெரியகண்மாய் முழு கொள்ளளவை எட்டி மீதம் உள்ள தண்ணீர் கடலில் கலந்து வீணானது
ராமநாதபுரம் பெரிய கண்மாய்
இந்த பெரிய கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி 2- ம் போக விவசாயத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்
இதனை தொடர்ந்து பெரிய கண்மாயில் தண்ணீர் வற்றியது இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் கோடை வெயில் வாட்டி வதைத்தது நீர்நிலைகள் வறண்டன
இதனால் கிராம குடிநீர் திட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது இதன் மூலம் நீர் ஆதாரங்களில் தண்ணீர் சேர்ந்தது இது போன்ற நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சுமார் ஒரு அடிக்கும் மேலாக தண்ணீர் இருப்பு இருந்து வருகிறது
தண்ணீர்
( தண்ணீர் வீணாக வெளியேறுகிறது)
ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடும் கோடையிலும் குறையாமல் இருப்பதற்கு பெரிய கண்மாய் தண்ணீர்தான் காரணம் ஆகும்
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ( தென்) கலுங்கில் மொத்தம் உள்ள 6 ஷட்டர் கதவுகளில் 2 கதவுகள் ஷட்டர் பழுதாகி நீர்கசிவு அதிகமாக ஏற்பட்டுள்ளது
இதனை சற்று உன்னிப்பாக பார்த்தால் சேதமடைந்து நேளிந்து முழுமையாக அடைக்க முடியாத வகையில் உள்ளது தெரிகிறது முறையான பராமரிப்பு இராமநாதபுரம் பொதுப்பணி துறையிடம் இல்லாத காரணத்தினால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத வகையில் வீணாக வெளியேறி வருகிறது
Latest Ramanathapuram District News
மேலும் கண்மாயில் காட்டு கருவேல மரங்கள் மற்றும் நாணல் புற்கள் போன்றவை வளர்ந்துள்ளதால் கண்மாயின் நீர்மட்டம் பாதிக்கும் நிலையில் இருந்து வருகிறது
ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த பழுதான ஷட்டரை சரி செய்வதுடன் பெரிய கண்மாயை தூர்வாரி வைகை தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.