இராமநாதபுரம் அருகே கீழக்கரை பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்.

கார்மேகம்

UPDATED: Nov 9, 2024, 10:16:58 AM

இராமநாதபுரம்

கீழக்கரையில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு 21 வார்டுகளில் 100 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன இந்த நிலையில் பருவ மழை காரணமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி கொசுக்கள் அதிகரித்துள்ளது

இதனால் கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

இந்த காய்ச்சல் வந்தவர்களுக்கு அதிகம் உடல் சோர்வு முழங்கால் வழி தலைவலி தொண்டை வலி கண் எரிச்சல் ஏற்படுகிறது 

மர்ம காய்ச்சல்

வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்ற அனைவருக்கும் பரவும் நிலை இருந்து வருகிறது இது குறித்து மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மழை பெய்ததின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் நிலை உள்ளது 

சுகாதார துறையினர் விரைந்து சுகாதார பணிகள் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

VIDEOS

Recommended