பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை.

கார்மேகம்

UPDATED: Oct 17, 2024, 9:49:44 AM

ராமநாதபுரம் மாவட்டம் 

பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்று 17/10/2024 வியாழக்கிழமை 90 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடக்கிறது

( பாம்பன் புதிய பாலம்)

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான ரெயில் பாலத்தின் அருகில் சுமார் ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது

இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் செல்லும்போது மேல் நோக்கி திறந்து மூடும் வகையில் செங்குத்து வடிவிலான 77 மீட்டர் நீளமும் சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம்  அமைக்கப்பட்டுள்ளது

இந்த தூக்குப்பாலத்தை திறந்து மூடும் சோதனை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடத்தப்பட்டு வந்தது நேற்று மீண்டும் ரோடு  பால உயரத்திற்கு முழுமையாக திறந்து மூடி சோதனை நடைபெற்றது 

( அதிவேக சோதனை)

மேலும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது

மதியம் 1-மணியில் இருந்து 2.30 மணிக்குள் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரெயில் நிலையம் வரை இந்த சோதனை நடக்க இருக்கிறது சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காலிப் பெட்டிகளுடன் ரெயிலை இயக்கி சோதனை நடத்த ரெயில்வே துறை முடிவு  செய்துள்ளது.

Latest Ramanathapuram District News

இந்நிலையில் இன்று அதிவேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் மண்டபம் பாம்பன் ராமேஸ்வரத்துக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் தண்டவாள பகுதியில் மிக கவனமாக இருக்க வேண்டும் என ரெயில்வேதுறை எச்சரித்துள்ளது. 

 

VIDEOS

Recommended