• முகப்பு
  • விவசாயம்
  • திருவள்ளூரில் தொடர் மழையால் 200 ஏக்கர் நடவு செய்த நெல் நாற்று நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை

திருவள்ளூரில் தொடர் மழையால் 200 ஏக்கர் நடவு செய்த நெல் நாற்று நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை

சுரேஷ் பாபு

UPDATED: Oct 17, 2024, 6:21:33 PM

திருவள்ளூர் மாவட்டம்

வெள்ளியூர் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நான்காயிரம் ஏக்கர் அளவில் முப்போகம் நெற்பயிர் விவசாயம் ஆண்டாண்டு செய்து வருகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மூன்றாம் போகத்திற்கான நெல் நாற்று நடவை கடந்த 20 நாட்களுக்கு முன்பாக நடவு செய்துள்ளனர் .

கன மழை

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்த கன மழையின் காரணமாக நடவு செய்த மூன்றாம் போகம் நெல் நாற்றுகள் சுமார் 200 ஏக்கர் அளவில் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

வங்கியில் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்து ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நடவு செய்த 200 ஏக்கர் நெல் நாற்றுகள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதம் அடைந்திருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

வங்கிகளும் நகைகளை அடகு வைத்து  கடன் வாங்கி குழந்தை போல் பார்த்து  நடவு செய்த நெல் நாற்றுகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கி தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து உள்ளதாகவும் 

கடனில் இருந்து மீள்வதற்கு அரசு சேதம் அடைந்த நெல் நாற்று பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Breaking News Today In Tamil 

மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த விவசாய நிலங்களை திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நீரில் மூழ்கியுள்ள நெல் நாற்றுகள் தண்ணீர் வடிந்த பின்னர் உரங்கள் மூலமாக காப்பாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் 

காப்பாற்ற முடியாத நடவு செய்த நெல் நாற்றுகளை அரசு கணக்கெடுப்பின்படி நிவாரணம் அளித்திட அரசு முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended