• முகப்பு
  • இந்தியா
  • தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா - இலங்கை கூட்டுக் குழு கூட்டம் விரைவில்‌ கூட்டப்படும் என ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்.

தமிழக மீனவர்கள் கைது பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா - இலங்கை கூட்டுக் குழு கூட்டம் விரைவில்‌ கூட்டப்படும் என ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்.

கார்மேகம்

UPDATED: Aug 7, 2024, 6:12:48 AM

இராமநாதபுரம் மாவட்டம்

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண அமைக்கப்பட்டுள்ள இந்தியா- இலங்கை‌ கூட்டு நடவடிக்கை குழு

கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளதாக சென்னை ஐ கோர்ட்டில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மீனவர்கள்‌ கைது

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஜனவரி 22- ந் தேதி கைது செய்தனர் 

அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐ கோர்ட்டில் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கு பொருப்பு தலைமை நீதிபதி ( டி. கிருஷ்ணகுமார் நீதிபதி ( கே. குமரேஷ்பாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முதல் அமைச்சர் கடிதம்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மவுரியா இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருகிறது 2 நாட்களுக்கு முன்பு கூட இலங்கை இந்திய மீனவர்கள் மீன்பிடி படகு மீது தாங்கள் படகை மோதவிட்டு ஒருவர் பலியாகியுள்ளார் மற்றொருவர் மாயமாகியுள்ளார்

அதனால் இலங்கை இந்தியா கூட்டு நடவடிக்கை குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று வாதிட்டார் அரசு‌ தரப்பில் ஆஜரான அரசு  பிளீடர் எட்வின் பிரபாகர் மீனவர்கள் கைது சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.

கூட்டுக் குழு கூட்டம்

மத்திய அரசு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் இலங்கை கடற்படையினரால்‌ கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையால் அவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்‌ படுகின்றனர்

மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாட்டு செயலாளர்கள் மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா இலங்கை கூட்டு நடவடிக்கை குழு விரைவில் கூட்டம் கூட்டி இது சம்பந்தமாக விவாதிக்க உள்ளது என்று கூறினார்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மத்திய அரசின் வாதத்தை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். 

 

VIDEOS

Recommended