கடந்த 2019 ஆம் ஆண்டை காட்டிலும் இந்த முறை வாக்குபதிவு அதிகரித்துள்ளது !

நெல்சன் கென்னடி

UPDATED: Apr 19, 2024, 6:50:46 PM

தமிழகத்தில் 39 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் 7 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திதார் அப்போது பேசிய அவர் :

7மணி வரை 72.09% வாக்குபதிவு பதிவாகி உள்ளது. ஒரு சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களித்து வருகிறார்கள். 

அதிகப்படியாக கள்ளக்குறிச்சி 75.76%  மற்றும் தருமபுரி74.44% மற்றும்  குறைந்தபட்சம் மத்திய சென்னை 67.35%  பதிவாகி உள்ளது.

குறைந்தபட்சமாக தென் சென்னை 67.85% வாக்குகள் பதிவாகி உள்ளது.கடந்த முறையை விட இப்போது அதிகரித்துள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு 69% இருந்தது இப்போது 72.09% ஆக உள்ளது. கடைசி வாக்காளர் வரை வாக்கு அளித்த பின்னர் நாளை 12மணிக்கு இறுதி விபரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் தற்பொழுது உள்ள நிலை தொடரும். 

வாக்கு இயந்திரம் தொடர்பான புகார் பெரிதாக வரவில்லை ஒரு கட்சியிலிருந்து மட்டும் புகார் அளித்துள்ளார்கள்.

அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம் என கூறினார்.

வாக்கு பதிவு இயந்திரங்களிலும் சரி பொது பிரச்சனையும் சரி பெரிதாக இல்லை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சுமூகமான முறையில் தேர்தல் நடைபெற்றது.

நிலையான கண்காணிப்பு குழுவும் தேர்தல் பறக்கும் படையும் திரும்ப பெறப்படுகிறது தேர்தல் நடைபெறும் அண்டை மாநில எல்லைகளில் மட்டும் இப்பொழுது உள்ள நிலை , நிலை தொடரும் என கூறினார்.

 

  • 9

VIDEOS

Recommended