நெல் சேமிப்பு கிடங்குகளை கட்டமைப்பதில் கோட்டை விட்ட ஸ்டாலின் அரசு.

சண்முகம்

UPDATED: Oct 1, 2024, 1:23:04 PM

கடலூர் மாவட்டம்

புவனகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான கீரப்பாளையம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 2 லட்சம் நெல் மூட்டைகளுக்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை பிளாஸ்டிக் தார்ப்பாய்கள் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. தார்ப்பாய்கள் சேதம் அடைந்தும் உள்ளன.

நெல் கொள்முதல் நிலையம்

பல நெல் கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல் கொள்முதல் முடிந்து விட்டது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு நெல் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல், திறந்து வெளியிலேயே மூடி வைக்கப்பட்டுள்ளது.

நெல் மூட்டைகள் மழை மற்றும் வெப்பத்தால் சேதம் அடைந்து நெல் புகைச்சல் மற்றும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இவற்றை அரிசியாக்கும் போது அந்த அரிசியை பொது மக்களால் உணவாக சாப்பிட முடியாத நிலையில் ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்டாலின் அரசு

மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு விவசாயிகளையும் காப்பாற்ற வில்லை.. 

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைப் பொருட்களையும் காப்பாற்றவில்லை என விவசாயிகளும் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

மேலும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது.

பருவ மழை

தற்போது பருவ மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் தினமும் மழை பெய்து வருகிறது‌.

எனவே உடனடியாக நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், இல்லை எனில் நெல்லை கொள்முதல் செய்து எந்த பயனும் இல்லை எனவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended