- முகப்பு
- மாவட்டச் செய்தி
- காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர், நத்தப்பேட்டை கால்வாய் சுத்தப்படுத்த 108 கோடி செலவு செய்ததாக மாநகராட்சி கூறுவது முற்றிலும் பொய் விவசாய சங்க மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.
காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர், நத்தப்பேட்டை கால்வாய் சுத்தப்படுத்த 108 கோடி செலவு செய்ததாக மாநகராட்சி கூறுவது முற்றிலும் பொய் விவசாய சங்க மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.
லட்சுமி காந்த்
UPDATED: Jun 28, 2024, 12:51:02 PM
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரும், சாய ஆலையிலிருந்து வெளியேறும் சாய நீரும் , நகரின் மையத்தில், எட்டு கிலோமீட்டர் தூரம்ஹ்ர நீளமுள்ள மஞ்சள் நீர் கால்வாய் வழியே நத்தப்பேட்டை ,வையாவூர் உள்ளிட்ட ஐந்து ஏரிகளில் கலப்பதால், அந்தப் பகுதிகளின் நீர்நிலைகள் மாசடைந்து, விவசாயம் செய்ய முடியவில்லை, , மக்களுக்கு தோல் வியாதி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படுவதாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் குற்றச்சாட்டை வைத்தனர்
காஞ்சிபுரம் மாநகராட்சி 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மஞ்சள் நீர் கால்வாய் கழிவுகள் மற்றும் ஏரிகளில் சேரும் கழிவுகளை சுத்தப்படுத்தியதாக கூறுவது முற்றிலும் பொய்யானது என விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.நேரு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அவர்களிடம் பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்ததால் மாநகராட்சி ஆணையரும் மாநகராட்சி செயற்பொறியாளரும் திடுக்கிட்டு செய்வதறியாமல் திகைத்தனர்.கேள்வி கேட்ட விவசாயிடம் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா? அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என மாநகராட்சி அதிகாரிகள் 108 கோடி ரூபாய் பணம் திமுகவினரால் சூறையாடப்பட்டதை மறைமுகமாக ஒத்துக் கொண்டனர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் எனும் குறைத்தீர் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று விவசாயிகளிடமிருந்து நேரடியாக மனுக்களையும் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளையும் கேட்டு அறிந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்.
இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் பெரும் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் இதில் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திடம் பல விதமான கேள்விகளை கேட்டு தீர்வு காண முற்பட்டனர்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் விவசாயிகள் கூட்டம் என்பதால் அதிக அளவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை இதில் முன் வைத்து பேசினர்.
விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே நேரு அவர்கள் , காஞ்சிபுரம் மாநகராட்சியில் கழிவுநீர்களும் சாய நீர்களும் மஞ்சள் நீர் கால்வாய் வழியே ஓடி சென்று நத்தப்பேட்டை வையாவூர் உள்ளிட்ட ஐந்து ஏரிகளில் கலந்து ஏரி தண்ணீரை மாசு ஏற்படுவதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தோல் வியாதிகள், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல தொற்று வியாதிகள் ஏற்படுகின்றது.
அதேபோல விவசாயம் பாதிக்கப்படுகின்றது . மஞ்சள் நீர் கால்வாய் சுத்தப்படுத்த 40 கோடியும், நத்தப்பேட்டை ஏரியை சுத்தப்படுத்த 68 கோடியும் எங்கே போனது,, மாநகராட்சியில் இந்த இரண்டு திட்டங்களையும் 108 கோடி ரூபாயில் செய்து விட்டோம் என பொய்யான தகவலை கூறுகின்றார்கள். இது நாள் வரையில் எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லை கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமே செயல்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் மாநகராட்சியின் முறைகேடு பற்றி மிகப் பகிரங்கமாக விவசாய சங்கத்தினர் கூறியதால் திடுக்கத்துப்போன ஆணையர் மற்றும் செயல் பொறியாளர் இருவரும் கேள்வி கேட்ட நபரிடம் சற்று அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது .
இது மேல் இடத்து சமாச்சாரம் என கூறி சென்றது குறிப்பிடத்தக்கது.