திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை மாற்றக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜ்குமார்

UPDATED: Jul 24, 2024, 8:24:09 AM

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை மாற்ற ஆர்ப்பாட்டம்

எதேச்சகாரியாக செயல்படும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அனைத்து கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 

மதிமுக மாவட்ட செயலாளர் நெமிலிச்சேரி பாபு தலைமை தாங்கினார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் தளபதி சுந்தர், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு தலைவர் சுந்தர்ராஜன் , மதிமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் அந்திரிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் பால சிங்கம், சிபிஐ மாவட்ட மாநில துணை பொதுச்செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சி அரசியல் குழு தலைவர் நீல வானத்து நிலவு சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

Latest Thiruvallur District News

திருவள்ளூர் மாவட்டம் 1997 ஆம் ஆண்டு முதல் பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது .

இங்கு பலர் மாவட்ட ஆட்சித் தலைவர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். 

கடந்த ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியராக டாக்டர் பிரபு சங்கர் செயல்படுகிறார்.

மக்கள் தொடர்பு இல்லாத ஆட்சியராக இருப்பதால் இவரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.

கும்மிடிப்பூண்டி அருகே வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

Breaking News Today Live

திருவள்ளூர் நகரமாகி சென்னை விரிவாக்கமாகவும் வளர்ந்து வருகிறது. 

இந்த சூழலில் அடித்தட்டு மக்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். 

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் வீடுகளை அகற்றும் பணிகளை செய்து வருகிறார். 

4-6-2024 அன்று ஆர்.கே.பேட்டை வட்டம், எஸ்.வி.ஜி. புரம் கிராமத்தில் 113 நபர்களுக்கு கடந்த 2000 ம் ஆண்டு அரசு அதிகாரி கையொப்பத்துடன் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் 54 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளை முன்னறிவிப்பு ஏதும் இன்றி இடித்து தள்ளியுள்ளனர்.

Thiruvallur News Today Live

அதே நாளில் கும்மிடிப்பூண்டி வட்டம், தேர்வாய் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரையில் ஒரு வீட்டை அப்புறப்படுத்த முயற்சிக்கும் போது, வீட்டு உரிமையாளர் அவகாசம் கேட்ட பிறகும், வீட்டை இடித்துள்ளனர். அவர் மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். 

இதுபோல மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வீடுகளை இடிப்பதில் அவசரம் காட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் கொடுப்பது சம்பந்தமாகவும் சிந்திக்கவில்லை.

மலைவாழ் மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு, பட்டாக்களும் வழங்கப்பட்டன. 

ஆனால் அதற்கான இடத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.

Latest Thiruvallur News & Live Updates 

அரசியல் கட்சிகள், சங்கங்கள், பொது சேவை அமைப்புகள் மக்களின் பிரச்சனைகளுக்காக ஆட்சியரை சந்திக்க செல்கின்ற போது, நீங்கள் மட்டும் வர வேண்டியதுதானே, மற்றவர்களை ஏன் அழைத்து வருகிறீர்கள், என பேசி வருகிறார். 

உடன் வரும் மக்கள் பிரதிநிதிகளையும் கேவலப்படுத்தும் வருகிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தொடர்ந்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொது மக்களிடம் ஒருமையில் பேசுகிறார்.

காங்கிரஸ் -சிபிஐ(எம்) - சிபிஐ - மதிமுக -  விடுதலை சிறுத்தைகள் 

ஆகவே அன்றாடம் ஏராளமான மக்கள் சந்திக்க கூடிய மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையில் மாற்றம் இல்லாத போது, மக்களுக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் செயல்படும் மாவட்ட ஆட்சியரை மாறுதல் செய்திட வேண்டும்

என் தமிழ்நாடு அரசை காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கோ மணி, மணியரசு, கே .எம் .வேலு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

VIDEOS

Recommended