திருச்சியில் மருத்துவர் மீது தாக்குதல்.

JK

UPDATED: Nov 6, 2024, 10:37:29 AM

திருச்சி 

மிளகுபாறை பகுதியில் செயல்படும் இஎஸ்ஐ மருத்துவமனையில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவராக இருப்பவர் கார்த்திகேயன். 

மருத்துவர் கார்த்திகேயன் நேற்று மருத்துவமனைக்கு வந்த பொழுது தன்னுடைய காரை இன்டிகேட்டர் போடாமல் திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அப்பொழுது அந்த வழியாக வந்த கருமண்டபத்தை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் மருத்துவர் கார்த்திகேயனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் தகராறு முற்றிய நிலையில் மருத்துவர் கார்த்திகேயன் பிரவீனை திட்டி விட்டு மருத்துவமனைக்குள் சென்று உள்ளார். தொடர்ந்து பிரவீன் தன்னுடைய உறவினர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த 10கும் மேற்பட்டோர் மருத்துவர் கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த கும்பல் மருத்துவர் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த மருத்துவர் கார்த்திகேயன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல பிரவீனும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து கன்டோன்மென்ட் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மருத்துவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended