• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சேத்தியாத்தோப்பு அருகே தாய் தந்தையை இழந்த 4 சிறுமிகள் உதவி கோரிக்கை சிறுமிகளை தற்காலிகமாக காப்பாற்றி வரும் கிராம மக்கள்.

சேத்தியாத்தோப்பு அருகே தாய் தந்தையை இழந்த 4 சிறுமிகள் உதவி கோரிக்கை சிறுமிகளை தற்காலிகமாக காப்பாற்றி வரும் கிராம மக்கள்.

சண்முகம்

UPDATED: Sep 16, 2024, 8:55:43 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன்- வீரம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கூலி வேலைதான் பிரதான தொழில். இந்த தம்பதிக்கு ஜனனி (14), ஜமுனா (12), சஞ்சனா (9), சாதனா (6) என நான்கு பெண் பிள்ளைகள்.

இவர்கள் அருகிலுள்ள உயர்நிலை மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இளஞ்செழியன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக் கோளாறால் இறந்து விட்டார்.

அதன் பிறகு வீரம்மாள் பிள்ளைகளை கூலி வேலை செய்து காப்பாற்றி வந்த நிலையில் வீரம்மாளுக்கு ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு, வறுமையால் சிகிச்சை அளிக்க முடியாமல் இன்று(15-09-2024) உயிரிழந்தார்.

அள்ளூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் தங்கைகளை காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் தங்களது கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு உதவிகள் வேண்டும் என நான்கு சிறுமிகளும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இவர்களது தாயாரின் இறுதி மரியாதை அள்ளூர் கிராம மக்கள் முன்னின்று செய்தனர். மேலும் தற்காலிகமாக இந்த நான்கு சிறுமிகளுக்கும் தேவையான உதவிகளை கிராம மக்கள் தான் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended