• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் குப்பை மேடாக மாற்றி வருவது ஏன் ?

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவுகளை கொட்டி நகராட்சி நிர்வாகம் குப்பை மேடாக மாற்றி வருவது ஏன் ?

அந்தோணி ராஜ்

UPDATED: Aug 24, 2024, 10:40:07 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்

புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, சென்னை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமுளி, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தினசரி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.

பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம், கடைகள் வாடகை, வாகன காப்பக ஒப்பந்த தொகை, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கான வரிகள் உள்ளிட்ட பல வகைகளில் நகராட்சிக்கு மாதம் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

Latest Rajapalayam News

இருந்தும் பேருந்து நிலையத்தில் குடிநீர், இலவச கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கை, காத்திருப்பு அறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதும் இல்லாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் ராஜபாளையம் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து, சாக்கடை கழிவுகளை நகராட்சி பணியாளர்களே பேருந்து நிலைய வளாகத்தில் வந்து கொட்டுகின்றனர்.

இதனால் துர்நாற்றம் எழுந்து சுகாதார சீர்கேடு நிலவுவதால் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே, சாக்கடை கழிவுகளை கொட்டி பேருந்து நிலையத்தை குப்பை மேடாக மாற்றி வருவது பயணிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended