• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விபத்து ஏற்பட்டும் வடிகால் வாய்க்கால் பணிகளை முடிக்காத அரசு தினமும் வேதனையை அனுபவித்து வரும் பொதுமக்கள்.

விபத்து ஏற்பட்டும் வடிகால் வாய்க்கால் பணிகளை முடிக்காத அரசு தினமும் வேதனையை அனுபவித்து வரும் பொதுமக்கள்.

சண்முகம்

UPDATED: Sep 4, 2024, 9:43:09 AM

கடலூர் மாவட்டம் 

ஸ்ரீமுஷ்ணத்தில் நெடுஞ்சாலை தறை மூலம் சில வாரங்களுக்கு முன்பு நகரில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

என்று பணிகள் துவக்கப்பட்டதோ அன்றிலிருந்து ஆமையை விட மிக மெதுவாக பணிகள் நடைபெற்று இன்னும் முடிவுறாமல் இருந்து வருகிறது. இதனிடையே இந்த பணிகளுக்காக அமைக்கப்பட்ட கம்பிகள், வெட்டப்பட்ட பள்ளங்கள் ஆபத்தான முறையில் இருந்து வருவதால் இதில் விபத்து ஏற்படுத்துகிறது.

கடந்த மாதத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இதில் சிறுவன் ஒருவன் வடிகால் வாய்க்காலில் விழுந்து காயம் ஏற்பட்டது.

வடிகால் பணி

பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.அதற்குப் பிறகு வந்த நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் உள்ள பகுதியில் பச்சை நிறப்படுதாவை கட்டி விட்டு சென்றதோடு சரி, அதற்கு பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என போராட்டமும் நடத்தி பார்த்தனர் பொதுமக்கள், அதற்கும் பலனில்லை. தற்போது இப்பகுதி பொதுமக்கள் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

Latest Cuddalore District News 

வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. பணிகள் முடிவுறாமல் இருப்பதால் வெட்டப்பட்ட பள்ளங்களிலும், நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகளிலும் பலருக்கும் உயிராபத்து ஏற்படுத்தும் படியாக இருந்து வருகிறது. 

அதனால் அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் விரைந்து வடிகால் வாய்க்கால் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended