• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விரக்தி அடைந்த விவசாயி, ஆட்சியர் அலுவலகத்தில், மனுவுக்கு தேங்காய், பழம், பத்தி வைத்து நூதன வழிபாடு.

விரக்தி அடைந்த விவசாயி, ஆட்சியர் அலுவலகத்தில், மனுவுக்கு தேங்காய், பழம், பத்தி வைத்து நூதன வழிபாடு.

செ.சீனிவாசன் 

UPDATED: Aug 19, 2024, 11:19:12 AM

நாகை மாவட்டம் 

மகாதானம் கிராமத்தில் வசிக்கும் பன்னீர், ராமதாஸ், ரமணி ஆகிய மூவரும் அங்குள்ள புறம்போக்கு களத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விவசாயத்திற்கு செல்லும் பாதை அடைபட்டதால், அவ்வழியை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இதனிடையே புறம்போக்கு களத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றி விவசாய நிலத்திற்கு செல்ல முறையான பாதை அமைத்து தரக்கோரி, நாகை மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி இராமன் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Latest Nagapattinam District News 

மேலும் தான் தார்ச்சாலை அமைக்க வழங்கிய இடத்தையாவது தாருங்கள் என மனு வாயிலாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதனால் விரத்தி அடைந்த விவசாயி இராமன், இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் கொண்டு வந்த மனுவை தரையில் வைத்து அதன் மீது தேங்காய், பழம் பத்தி உள்ளிட்ட பூஜை பொருள்கள் வைத்து 20 வருஷமாக கிடப்பில் போடப்பட்ட மனுவின் நிலை இதுதான் எனக்கூறி நூதன வழிபாட்டில் ஈடுபட்டார்.

News

20 வருஷமாக தான் அளித்த மனு கிடப்பில் போடப்பட்டதாக கூறி விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் அம்மனுவுக்கு தேங்காய் பழம் பத்தி வைத்து பூஜை செய்துவிட்டு சென்ற சம்பவம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended