கல்விக்கு கண் கொடுத்த கர்ம வீரர் கு.காமராஜர் பிறந்த தினம்

Bala

UPDATED: Jul 15, 2024, 4:00:12 AM

காமராஜர் பிறந்த நாள்

கல்விக்கண் திறந்த காமராஜரின், பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்புநலன்களின் வடிவமாக திகழ்ந்த காமராஜர் 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி, விருதுநகரில் பிறந்தார்.

1936ல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர், 1940ல் விருதுநகர் நகராட்சித் தலைவர், 1946-52 வரை சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் தென் னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந் தலைவர், கர்ம வீரர் என்றெல்லாம் புகழப்பட்டவர். இவர் 'கருப்பு காந்தி' என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

இவரது ஆட்சியின் போது இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரை எம்.ஜி.ஆர் என் தலைவர் என்றும், ஈ.வே.ரா.,பச்சைத் தமிழன் என்றும் பாராட்டியுள்ளார்.

காமராஜர் இறந்த நாள்

பல நூற்றாண்டுகள் வாழாவிட்டாலும் இந்த நூற்றாண்டு மக்கள் மனதிலும் நிலையாக இருக்கும் கர்மவீரர் காமராஜர், தனது 72வது வயதில் 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மறைந்தார். மறைவுக்குபின் 1976ல், இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

 

VIDEOS

Recommended