இருளர் சமூக பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம்.

லட்சுமி காந்த்

UPDATED: Sep 25, 2024, 6:40:28 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவி பெயர் செல்வி வயது 27. இவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கர்ப்பிணி பெண்ணான செல்விக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது பிரசவ வலி ஏற்பட்டு வாலாஜாபாத் அடுத்துள்ள அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்க்கு செல்ல 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.

பிரசவம்

இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகமாகி பனிக்குடம் உடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்திற்க்கு கிளம்பும்போது செல்விக்கு அதிகமான பிரசவ வலி ஏற்பட்டு வலி தாங்காமல் கத்தி உள்ளார். 

அவசரகால ஓட்டுநர் சி.பழனிவேல் என்பவர் இதை புரிந்து கொண்டு ஆம்புலன்ஸை பாதுகாப்பாக நிறுத்தினார்.

108 வாகனத்தின் அவசரகால மருத்துவ நுட்புஞர் அபூர்வா அவர்கள் விரைந்து செயல்பட்டு, வலியால் துடித்துக் கொண்டிருந்த செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். 

அதன்பேரில் செல்விக்கு 1 கிலோ 800 கிராம் எடை உள்ள ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளார்கள்.

ஆரம்ப சுகாதார மையம்

ஆரம்ப சுகாதார மையத்தில் பனிக்குடம் உடைந்து ரத்தப்போக்கு வெளியேறிய நிலையில் ஒரு இளம் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்ஸின் மருத்துவ உதவியாளர் ஒருவர் சிகிச்சை அளித்து, எந்த பிரச்சனையும் இல்லாமல் நார்மல் பிரசவத்தில் ஆரோக்கியமான, அழகான பெண் குழந்தை பிறந்ததை கண்ட அப்பகுதி இருளர் சமூக மக்கள் ஆம்புலன்ஸின் நுட்புஞர் அபூர்வா மற்றும் ஆம்புலன்ஸ் பைலட் சி.பழனிவேல் ஆகிய இருவரையும் பாராட்டினார்கள்.

பின்னர் செல்வி , பச்சிளம் குழந்தை ஆகியோர்களை அய்யம்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்து பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended