• முகப்பு
  • குற்றம்
  • காங்கிரஸ் கட்சியினர் உத்தரவாத அட்டை என பண பட்டுவாடா செய்ய டோக்கன் வழங்குவதாக குற்றச்சாட்டு.

காங்கிரஸ் கட்சியினர் உத்தரவாத அட்டை என பண பட்டுவாடா செய்ய டோக்கன் வழங்குவதாக குற்றச்சாட்டு.

அந்தோணி ராஜ்

UPDATED: Apr 16, 2024, 10:00:54 AM

விருதுநகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஏழை பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்ட வாக்குறுதி உத்தரவாத அட்டையை பொதுமக்களிடம் வழங்கி பணம் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.

தேர்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக தேமுதிக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மாணிக்கம் தாக்குறை தகுதி நீக்கம் செய்ய புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு ஷூட்டிங்கிற்கு வந்த இரு கட்சியினர் என்னேனோவோ புலம்பி வருகிறார்கள் 

கர்நாடக, தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் முக்கிய வாக்குறுதிகளை உத்தரவாதம் அளித்து அதனை மக்களிடம் சொல்லி அதனை அமல்படுத்தியுள்ளோம்

இதேபோல் தமிழகத்திலும் தற்போது நாங்கள் அளித்துள்ள மகாலட்சுமி திட்ட வாக்குறுதியை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறோம், யாரிடம் கொடுகிறார்க்காளோ அவர்களது விவரங்களை பெறுகிறார்கள் இதில் என்ன தவறு உள்ளது  

மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்க கூடாது என்று நினைப்பவர்கள்தான் இப்படி யோசிக்க முடியும்

தோல்வி பயத்தால் மோடியின் கட்சியும் மோடியை டாடி என சொன்ன (அதிமுக) ஆகிய இரு கட்சிகளும் பதறுகின்றனர்.

கட்சியின் தலைமை எழுதி கொடுத்து நாங்கள் இதை மக்களுக்கு செய்வோம் என உத்தரவாதம் அளிக்க பாஜக, அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கும் தைரியம் தில் உள்ளதா? என கேள்வி 

இவர்களை பொறுத்தவரை மக்களுக்கு கிடைக்கும் எந்த நலத்திட்டங்களையும் மக்களுக்கு கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர்

இவர்களை பொறுத்தவரை பொய்யை சொல்லி வாக்கு சேகரிக்கிறார்கள் 

இந்தியாவின் ஏழ்மையை ஒழிப்பதற்கானகடைசி போராட்டமாக இந்த மகாலட்சுமி திட்டத்தை வழங்க உள்ளோம்

ராகுல் காந்தி பிரதமரானால் ஏழை பெண்களுக்கு மகாலட்சுமி திட்டத்தில் 1லட்சம் ரூபாய் வழங்கியே தீருவார்கள்

விருதுநகர் வாக்காள பெருமக்கள் மிகவும் தெளிவானவர்கள், இதுபோன்ற போலியான, ஷூட்டிங்கிற்காக வந்தவர்களை விருதுநகர் மக்கள் ஏற்றிக்கொள்ள போவதில்லை

  • 1

VIDEOS

Recommended