• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆட்சியர் வண்டியா இல்ல கொசு மருந்து வண்டியா? இன்சூரன்ஸ் காலாவதியாகி 10 வருடங்கள் ஆன நிலையில் விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்டு வரும் அரசு வாகனம்.

ஆட்சியர் வண்டியா இல்ல கொசு மருந்து வண்டியா? இன்சூரன்ஸ் காலாவதியாகி 10 வருடங்கள் ஆன நிலையில் விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்டு வரும் அரசு வாகனம்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 6, 2024, 11:01:56 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருவாய் துறை பணிகளை ஆய்வு செய்யவும் பல்வேறு பகுதிகளுக்கு பணி காரணமாக சென்று வருவதற்கு அரசு சார்பில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சார் ஆட்சியருக்கு ஜீப் வாகனம் உள்ளது.

இந்த ஜீப்பு வாகனம் முறையாக பராமரிக்காத காரணத்தால் கரும்புகையை கக்கியவாறு பொது சாலைகளில் கொசு மருந்து அடிக்கும் வண்டியைப் போல சென்று வருகிறது.

வாகன காப்பீடு

மேலும் இந்த ஜீப்பு வாகனத்திற்கு வரும் 2027 ஆம் ஆண்டு வரை தகுதி சான்று உள்ள நிலையில் வாகன காப்பீடு கடந்த 2013ஆம் ஆண்டோடு நிறைவு பெற்று மீண்டும் புதுப்பிக்கப்படாமல் இருந்து வருவது வாகனத்தின் ஆவணத்தை சரிபார்த்த போது அம்பலம் ஆகியுள்ளது.

சாமானிய மக்களின் வாகனங்களுக்கு ஆவணங்களை சரி பார்க்கும் வட்டாரப் போக்குவரத்து துறை இது போன்ற அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எந்தவித சோதனையும் மேற்கொள்ளாமல் விதிமுறைகளை மதிக்காமலும், மீறும் செயல் வேதனையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended