• முகப்பு
  • குற்றம்
  • அம்மிக்கல்லால் கதவை உடைத்து வயதான தம்பதிகளை மிரட்டி 6 லட்ச மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையன்கள்.

அம்மிக்கல்லால் கதவை உடைத்து வயதான தம்பதிகளை மிரட்டி 6 லட்ச மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையன்கள்.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 8, 2024, 10:05:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

படப்பை பேரூராட்சியில் சமீபக்காலத்தில் அதிக வளர்ச்சியை பெற்று வருகின்றது. படப்பை நகரை சுற்றிலும் உள்ள விளை நிலங்கள் அதிக விலைக்கு விற்பனையாகி பல குடியிருப்புகள் உருவாகி வருகின்றது.

படப்பை அடுத்துள்ள புஷ்பகிரி பகுதியில் ராமசாமி (வயது 86) என்பவர் தன்னுடைய மனைவி குழந்தையம்மாளுடன் (வயது 76) வசித்து வருகிறார். தமக்கு சொந்தமான நிலத்தில் ஐந்து வீடுகளை கட்டி வாடகை விட்டுள்ளார் . ஒரு வீட்டில் ராமசாமி தம்பதிகள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று விடியற்காலை 2.30 மணி அளவில் இரண்டு மர்ம நபர்கள் 5 வீட்டில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த ஏதும் கிடைக்காத காரணத்தினால், ஐந்து வீடுகளின் வெளி தாழ்பாய்களை போட்டுவிட்டு, ராமசாமி குழந்தையும்மாள் தம்பதிகள் குடியிருந்த வீட்டின் கதவை அம்மிக்கல் கொண்டு உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

நகைகள் கொள்ளை 

ராமசாமி தன் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, இரண்டு மர்ம நபர்கள் கத்தி முனையில் அவர்களை மிரட்டி குழந்தையம்மாளின் கழுத்தில் அணிந்து இருந்த 8 சவரன் தாலி சரடு, காதில் அணிந்து இருந்த ஒரு சவரன் கம்மல் என சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்துக் கொண்டு ராமசாமி , குழந்தைம்மாள் தம்பதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி தலை மறைவாயினர்.

நகரை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ள இந்த இடத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் ராமசாமி வெளியே வந்து காவல்துறைக்கு புகார் கொடுக்க இயலவில்லை.

11 மணிக்கு மேல் தான் அந்த பகுதியாக சென்றவர்கள் கதவின் தாழ்ப்பாளை திறந்துவிட்டனர் . அதன் பிறகு தான் ராமசாமி மணிமங்கலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

க்ரைம் நியூஸ் 

இதைப்பற்றி மணிமங்கலம் காவல் துறையினரிடம் கேட்டபோது எந்த புகாரும் இதுவரையில் வரவில்லை எப்போதும் போல அலட்சியமாக பதில் கூறினர். 

மணிமங்கலம் காவல்துறையினரின் கையாலாகாத தனத்தால் மணிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதை வெளியே கூறக்கூடாது என பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended