செயின் பறிப்பில் ஈடுபட்ட லயன்ஸ் கிளப் உறுப்பினர் மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்.
சண்முகம்
UPDATED: Nov 10, 2024, 10:12:44 AM
கடலூர் மாவட்டம்
சிதம்பரம் கனகசபை நகர் 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வேலன் மனைவி விஜயவாணி(57). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழியராகவும் லயன்ஸ் கிளப் உறுப்பினராகவும் இருந்து வருவதாகவும்.
நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயவாணி, பின்னர் மொட்டை மாடிக்கு சென்று காய்ந்து கொண்டிருந்த துணியை எடுத்துள்ளார்.
Robbery
அப்போது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென விஜயவாணியின் முகத்தில் மயக்க ஸ்பிரேவை அடித்து அவர் கழுத்தில் இருந்த சுமார் இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து விஜயவாணி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் பெண்ணின் முகத்தில் மயக்க ஸ்பிரைவை அடித்து நகையை கொள்ளையடித்து சென்றது சிதம்பரம் மேலவீதியைச் சேர்ந்த அசத்துல்லா உசேன்(35) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து இரண்டரை பவுன் செயின், கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய மொபட், மற்றும் மயக்க ஸ்பிரே உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பட்டப் பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை அறுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.