• முகப்பு
  • சென்னை
  • செல்போன் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது வெடித்து சிதறியது

செல்போன் பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது வெடித்து சிதறியது

சுந்தர்

UPDATED: Apr 13, 2024, 7:06:29 PM

சென்னை போரூரில் தனியாருக்கு சொந்தமான செல்போன்கள் பழுது பார்க்கும் கடை ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய செல்போனை பழுது பார்ப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது கடையின் உரிமையாளர் வாடிக்கையாளரின் செல்போனை பழுது பார்த்து கொண்டிருக்கும் போது தீடிரென அந்த செல்போன் பேட்டரியில் இருந்து அதிகப்படியான புகை வந்துள்ளது.

புகை வந்த அடுத்த சில வினாடிகளில் அந்த செல்போன் வெடித்து சிதறியுள்ளது.

தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதிஷ்டவசமாக செல்போன் வெடித்ததில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை தகவல் வெளியாகி உள்ளது.

செல்போன் வெடித்ததற்கான காரணம் தற்போது வரை கடை உரிமையாளர் தரப்பில் இருந்தோ அல்லது காவல்துறை தரப்பிலோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • 3

VIDEOS

Recommended