• முகப்பு
  • குற்றம்
  • உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் சமையல் எண்ணெயை ஊற்றிய மனைவி.

உறங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் சமையல் எண்ணெயை ஊற்றிய மனைவி.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 22, 2024, 1:59:49 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. மீன் வியாபாரியான இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 

மீன் வியாபாரம் செய்துவிட்டு அந்தப் பணத்தில் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தினந்தோறும் மனைவியிடம் தகராறு செய்வதை ரவி வாடிக்கையாக கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது. 

கணவன் மனைவி

இந்நிலையில் எப்போதும் போல நேற்று இரவும் அதிக மது போதையில் வந்த ரவி தன்னுடைய மனைவி ஜெயந்தியிடம் மீண்டும் தகராறு செய்தார். பின்னர் படுக்கையறைக்கு சென்று தூங்கிவிட்டார். 

தினம்தோறும் குடித்துவிட்டு தகராறு செய்யும் கணவனால் , அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிய ஜெயந்தி, சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் கோல்டு வின்னர் சமையல் எண்ணெயை நன்றாக கொதிக்க வைத்து படுக்கை அறைக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த ரவி மீது ஆவேசத்துடன் ஊற்றியுள்ளார். உடனே ரவி அலறி அடித்து கூச்சலிட்டுள்ளார். 

தீவிர சிகிச்சை 

பின்னர் ரவியின் அலறல் சத்தம் கேட்டு இரண்டு மகன்களும் ரவியை மீட்டு காட்ராம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுகின்றனர். 

அங்கு மிகவும் ஆபத்தான சூழலில் ரவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

வழக்கு பதிவு 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் காவல்துறையினர் ரவியின் மனைவியான ஜெயந்தியை கைது செய்து சோமங்கலம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டு வந்த காதல் கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது , கொதிக்க வைத்த சமையல் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கணவன்மார்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

Recommended