போலி ஆவணம் மூலம் ஏரியில் மண் எடுக்கும் அவல நிலை.

சண்முகம்

UPDATED: Aug 20, 2024, 4:04:22 AM

கடலூர் மாவட்டம்

ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுப்புற ஸ்ரீ நெடுஞ்சேரி செயல்விழிபகுதிகளில் தற்போது வண்டல் மண் எடுக்கிறோம் எனும் பெயரில் மண் எடுத்து வருமானம் பார்க்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வண்டல் மண் எடுத்து வயல்களில் பயன்படுத்தி விவசாய மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என உள்ள நிலையில் வருவாய் துறை கண்களிலேயே மண்ணை தூவி விட்டு அல்லது வருவாய்த் துறையின் அனுமதியோடு வண்டல் மண் என்ற பெயரில் ஏரி, குளங்களில் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் பல அடி ஆழத்திற்கு மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.

Latest Cuddalore District News 

மண் எடுக்கப்படும் இடத்திலிருந்து 20கிலோ கிலோமீட்டர் தூரத்திற்கு மேலும் சென்று விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் வருவாய்த் துறையிடம் தெரிவித்தாலும் எதுவும் செய்யாமல் வருவாய்த்துறை அமைதி காக்கிறது. 

ஏற்கனவே இப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும், மண்வளமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல அடி ஆழத்திற்கு மண் எடுத்து விற்பனை செய்யப்படுவது இப்பகுதிகள் மேலும் பாதிப்பு ஏற்படுத்தும். வருவாய்த்துறை இதனை தடுக்க வேண்டும்.

மணல் திருட்டு

விவசாய பயன்பாடு என்று கூறிவிட்டு வியாபாரமாக மண் விற்பனை செய்து வருகின்றனர். அதனை நிறுத்த வேண்டும் எனவும் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர். 

முக்கியமாக விவசாய நிலங்களே இல்லாமல் மண் எடுக்க முடிவு செய்துவிட்ட நபர்கள் வேறு ஒரு நிலத்தின் ஆவணங்களை பயன்படுத்தி அனுமதி வாங்கி மண் எடுத்து வருமானம் பார்த்து வருகின்றனர் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

News

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் குறிப்பாக நில ம் வசதி இல்லாதவர்கள் போலி ஆவணம் மூலம் பர்மிட் பெற்றுக் கொண்டு நாள்தோறும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை அரசை ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended