- முகப்பு
- விளையாட்டு
- இந்திய அணிபயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார் டிராவிட்
இந்திய அணிபயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார் டிராவிட்
அஜித் குமார்
UPDATED: Jun 30, 2024, 4:15:58 AM
டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து, நேற்றுடன் அவர் விடை பெற்றார். டிராவிட் காலத்தில் தொடர் வெற்றிகளை குவித்த இந்திய அணி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதி வரை முன்னேறி தோல்வியடைந்தது. எனினும், டி20 உலகக் கோப்பையை நேற்று இந்திய அணி வென்றது.
இந்திய அணியின் இந்த வெற்றி தருணம் நினைவு கூரப்படுகையில் டிராவிட்டும் மனதில் வருவார் நேற்று நடந்த டி20 உலக கோப்பை போட்டியில்T20 WC இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில் கிளாசன் 52, டி காக் 39, ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 169/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இந்தியா தரப்பில் பாண்டியா 3, அர்ஷ்தீப், பும்ரா, தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்திய அணி அபார வெற்றி பெற்றது இதைத் தொடர்ந்து கோப்பையை வென்று இந்திய வீரர்கள் அனைத்து கோப்பையை சமர்ப்பித்து வழி அனுப்பி வைத்தனர்
விடை பெற்றார் ராகுல் டிராவிட் .