• முகப்பு
  • சென்னை
  • அம்பத்தூர் தாசில்தார் அலுவலகமா பாஜக அலுவலகமா பொதுமக்கள் கேள்வி ?

அம்பத்தூர் தாசில்தார் அலுவலகமா பாஜக அலுவலகமா பொதுமக்கள் கேள்வி ?

ராஜ்குமார்

UPDATED: Jul 22, 2024, 8:06:21 AM

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம்

அம்பத்தூர் உழவர் சந்தை அருகே வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பாடி, மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, கொரட்டூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், பானு நகர், முகப்பேர், பாடி குப்பம், போன்ற பகுதிகளிலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா விண்ணப்பித்தல், போன்ற பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர்.

Latest and Breaking Chennai News

அப்படி வரும் பொது மக்களிடம் அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் பாஜக பிரமுகர் கண்ணன் என்பவர் அங்குள்ள அதிகாரிகளின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தான் நினைத்தால் தான் இந்த அலுவலகத்தில் எந்த பணியும் நடைபெறும் அனைத்து சான்றிதழ்களும் என் மூலம் தாசில்தார்க்கு சென்றால் தான் கையெழுத்து போடுவார் என்று கூறி பொதுமக்களிடம் பல ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டும், 

பட்டா பெயர் மாற்றம் புதிய பட்டா விண்ணப்பித்தல் கிராம நத்தம் பட்டாக்களுக்கு வரும் வீட்டு உரிமையாளர்களை மடக்கி அவர்களிடம் பல லட்சம் பேரம் பேசி ஒரு வாரத்திலேயே பட்டா வாங்கித் தரப்படும் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும்

News

அது மட்டும் இல்லாமல் அங்குள்ள அதிகாரிகளின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பீரோக்களில் உள்ள முக்கிய கோப்புகளை இவரே எடுத்து சான்றிதழ்களை தயார் செய்வதும் பட்டா உள்ளிட்ட நகல்களை பிரின்ட் எடுப்பதும் அதனை தாசில்தாரிடம் வழங்கியவுடன் உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிப்பதால் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கோபத்தில் உள்ளனர் 

திமுக ஆட்சியில் பாஜக பிரமுகர் கட்டுப்பாட்டில் அம்பத்தூர் தாலுகா அலுவலகம் உள்ளது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது

Latest Chennai News

எந்த ஒரு அரசு பதவிகளும் இல்லாமல் அதிகாரிகளின் இருக்கையில் அமர்ந்து கொண்டு காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து கோப்புகளையும் கையாண்டு வசூல் வேட்டையாடும் பாஜக பிரமுகர் கண்ணன் மீது வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுப்பாரா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது 

அவர் செய்யும் அனைத்து பணிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended