அகில இலங்கை ‘கிக்பொக்சிங்’ போட்டியில் தங்கம்வென்றார்.

           (ஜே.எம்.ஹாபீஸ்)

நாவலப்பிட்டிய ஜயதிலக்க விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை கிக்பொக்சிங் போட்டித் தொடரில் 12 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான போட்டியில் கண்டி, வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் எம்.என்.‌ நபீர் அஹமட் முதலாம் இடத் தைப் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார்.

 தரம் 6 இல் கல்வி கற்கும் இவர் வெலம்பொடையைச் சேர்ந்த எம்.என். நலீம் எஸ்.ஏ. நசீரா தம்பதியினரின் புதல்வராவார்‌. கடந்த வருடமும் அதற்கு முந்தைய வருடம் நடந்த போட்டிகளில் முறையே தங்கப் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.   

இவருக்கான பயிற்சிகளை கம்பளையை சேர்ந்த டி.எம். நவ்ஷாத் வழங்கயிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended