காஞ்சிபுரத்தில் கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.குரல் தேர்வு


இந்த செய்தியை கேட்க, ஆடியோவை கிளிக் செய்யவும்

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏரிகள் முழு அளவை எட்டி உள்ளன. அதேபோல் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி உள்ளது. மழைகாலம் முடிவதற்க்கு முன்னதாகவே பனிக்காலம் தொடங்கி உள்ளது.

பனிகாலமான தை மாதமாதத்தை போல் காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 7.00 மணிவரை  கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோனேரிக்குப்பம், ஏனாத்தூர், ஓரிக்கை, தாமல், பரந்தூர், வையாவூர், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பொன்னேரிகரை, ரயில் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் திடீரென குளிர்பிரதேசமான ஊட்டியை போல் மாறி உள்ளது.

ஊட்டியில் உள்ளது போல பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக கண்களுக்கு தெரியவில்லை. சாலையும் பணி மூட்டத்தில் நிரம்பியுள்ளதால் சிறிது தூரத்தில் மட்டுமே சாலையும், வழியும் கண்ணுக்கு புலப்படுகிறது. 

இதனால் வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சிரமத்துடன் ஒட்டிச் சென்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமி காந்த்.
இந்தியா
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கொரோனாவினால் வீட்டில் தனிமை படுத்த பட்டவர்கள் செய்யவேண்டிய மூச்சுப்பயிற்சி - VIDEO

தமிழ்நாடு
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

அஜித்தின் சிட்டிசன் சிறப்பு காட்சிகள் | Ajith in Citizen supwr scenes

விளையாட்டுகள்
சென்னை
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

Chuck & Sarah 4x02 End Scene

மாவட்டம்
திரைப்படங்கள்
© THE GREAT INDIA NEWS

கருடா சூப்பர் ஹீரோ ஹாலிவுட் திரைப்படம் | Garuda superhero Hollywood movie