கல்பிட்டி யுனைடட் கழகம் நடப்பாண்டின் செம்பியன் மகுடத்தினை தனதாக்கியது

அரபாத் பஹர்தீன்

UPDATED: Apr 15, 2024, 8:13:24 AM

கல்பிட்டி புட்போல் லீக்" தொடரின் இறுதிப் போட்டியில் கல்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தினை 6:5 என்ற பெணால்டி கோல்களின் அடிப்படையில் வீழ்த்திய கல்பிட்டி யுனைடட் கழகம் நடப்பாண்டின் செம்பியன் மகுடத்தினை தனதாக்கி அசத்தியது.


கல்பிட்டி பேர்ல்ஸ் கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 7 பேர் கொண்ட "கல்பிட்டி புட்போல் லீக் - 2024" தொடர் கடந்த 13மற்றும் 14ஆம் திகதிகளில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

இதில் 6 அணிகள் பங்கேற்றன. கடந்த நோன்பு 20இல் 6 அணிகளுக்குமான வீரர்கள் ஏலம் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டனர். அந்தவகையில் பேர்ல்ஸ், யுனைடட், ப்ளஸி கைஸ், வெஸ்ட் ட்ரைகர்ஸ், லேகர்ஸ் மற்றும் ஹைபர் வேல்ஸ் ஆகிய 6 அணிகள் இத் தொடரில் பங்கேற்றன. 


இதற்கமைய முதல் சுற்று லீக் போட்டிகளாக இடம்பெற்றன. அதில் ஒரு அணி மற்றைய 5 அணியுடனும் ஒரு முறை போட்டியில் பங்கேற்றிருந்தன. இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் முதல் குவளிபயர் போட்டியில் மோதும். பின்னர் 3ஆம் 4ஆம் இடங்களைப் பிடித்த அணிகள் எலிமினேட்டர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் அணி முதல் குவளிபயர் போட்டியில் தோல்வியடையும் அணியுடன் 2ஆவது குவளிபயர் போட்டியில் பங்கேற்கும்.

பின்னர் குவளிபயர் ஒன்றில் வெற்றி பெற்ற அணியும் , குவளிபயர் 2இல் வெற்றி பெற்ற அணியும் இறுதிப் போட்டியில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. 


இதற்கமைய இறுதிப் போட்டியில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணியும், கல்பிட்டி யுனைடட் அணியும் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. இப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்த போதிலும் இரு அணிகளின் வீரர்களாலும் கோல் கணக்கை ஆரம்பிக்க முடியாமல் போனது. இதனால் முதல் பாதி கோளின்றி சமநிலை பெற்றது. பின்னர் தொடர்ந்த 2ஆவது தீர்மானமிக்க பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சியில் தீவிரம் காட்டினர். இருப்பினும் இரு அணிகளின் தடுப்பு வீரர்களும், கோல்காப்பாளர்களும் மிகச் சிறப்பாக விளையாட இரண்டாம் பாதியும் கோல்கள் இற்று நிறைவுக்கு வர போட்டி சமநிலையில் முடிந்தது. 

இதனால் நடப்பாண்டின் செம்பியனை தீர்மானிக்க பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதில் முதல் 3 உதைகளையும் இரு அணி வீரர்களும் கோலாக மாற்ற ஆட்டம் மேலதீக பெனால்டி கோல் வரை சென்று இறுதியில் கல்பிட்டி யுனைடட் அணியின் கோல்காப்பாளரான பர்ஹான் இரு கோல்களை தட்டி விட கல்பிட்டி யுனைடட் அணி 6:5 என்ற பெனால்டி கோல்களின் அடிப்படையில் வெற்றி பெற்று செம்பியன் மகுடத்தை தனதாக்கியது. 



இத் தொடரின் செம்பியன் அணிக்கு 50000 ரூபா ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணமும், அத்துடன் 2ஆம் இடம் பிடித்த பேர்ல்ஸ் அணிக்கு 25000 ரூபா ரொக்கப்பணமும் கிண்ணமும் வழங்கப்பட்டது. அத்துடன் தொடரின் சிறந்த கோல்காப்பாளரான யுனைடட் அணியின் பர்ஹானும், சிறந்த வீரரான ஹைபர் வேல்ஸ் அணியின் அஹதிரும், சறந்த இளம் வீரரான பேர்ல்ஸ் அணியின் ஹிசாமும் தெரிவாகினர். மேலும் இத் தொடரில் அதிக கோல்களை அடித்த வீரருக்கான தங்கக் காலணி விருதை பேர்ல்ஸ் அணியின் முன்கள வீரரான ஜாஹித் தனதாக்கினார். 

அத்துடன் இத் தொடரில் பங்கேற்க கத்தார் நாட்டிலிருந்து விடுமுறை பெற்று வந்து கடந்த 8ஆம் திகதி வபாத்தான 33 வயதான மர்ஹும் ஐயூப் நுஸ்கான் அவருக்கான நினைவுச் சீறுடை மற்றும் கடந்த 2023ஆம் ஆண்டு பெருநாள் தினம் 


வபாத்தான பேர்ல்ஸ் அணியின் முன்னாள் வீரரும், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான மர்ஹும் அக்மலுக்குமான பேர்ல்ஸ் அணியின் நினைவுச் சீறுடையும் வர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன்,செம்பியன் மகுடத்தினை வெற்றி கொண்ட யுனைடட் அணியின் உரிமையாளர் ஹம்தூன் நஜாத்தினால் செம்பியன் கிண்ணம் மர்ஹும் நுஸ்கானுக்கு சமர்பிக்கும் வகையில் அவரது சகோதரரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended