- முகப்பு
- விளையாட்டு
- ஜல்லிக்கட்டு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
Bala
UPDATED: Dec 24, 2024, 9:56:16 AM
ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் :
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை துன்புறுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி இல்லாமல் எந்த அமைப்புக்கும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட முடியாது.
அனைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
Jallikattu
போட்டி நடைபெறும் இடங்களில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுதல் அவசியம்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான விண்ணப்பங்கள், புதிதாக தொடங்கப்பட்ட www.jallikattu.tn.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் பெறப்பட வேண்டும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு வழிகாட்டுதல் கடிதம் அனுப்பியுள்ளார்.