தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு 5 மணி நிலவரம்

நெல்சன் கென்னடி

UPDATED: Apr 19, 2024, 1:34:40 PM

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குபதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் இன்னும் வாக்கு செலுத்த ஒரு மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போதேு பேசிய அவர் :

தமிழகம் முழுவதும் 5மணி நிலவரப்படி  63.20% வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. அதிகப்படியாக 67.52%தருமபுரி மற்றும் நாமக்கல் 67.37% மற்றும் 67.34%ஆரணி வாக்குகள் பதிவாகி உள்ளது. 

ஒவ்வொருக்கு ஒரு தனிப்பட்ட காரணங்களினால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்

செப்டம்பர் முதல் மார்ச் 20தேதி வரை சரிபார்த்தல் சேர்த்தல் நீக்கல் செய்துள்ளோம் அப்போதே சரி பார்த்துக்கொண்டிருந்தால் கடைசி நேரத்தில் அவர்களுக்கு இது போன்ற நிலை வராது என தெரிவித்தார்.

மத்திய சென்னை நாம் தமிழர் வேட்பாளர் கைது குறித்த கேள்விக்கு ?

49MA படி வாக்குச்சாவடி அலுவலரிடம் கோரிக்கை வைக்கலாம் எனவும் அதன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பாஜக கோவை வேட்பாளர் அண்ணாமலை புகார் குறித்த கேள்விக்கு ?

அது குறித்து அங்குள்ள அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள் என தெரிவித்தார்.

 

  • 6

VIDEOS

Recommended