• முகப்பு
  • இலங்கை
  • பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்படாவிட்டால் பதவி துறக்கும் வடிவேல் சுரேஷ் எம். பி.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்படாவிட்டால் பதவி துறக்கும் வடிவேல் சுரேஷ் எம். பி.

ராமு தனராஜா

UPDATED: Apr 24, 2024, 4:45:39 PM

வருகின்ற முதலாம் திகதிக்கு முன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்படா விட்டால் தனது அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா பண்ண உள்ளதாக பாராளுமன்ற உறுப்பனர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை சம்பந்தமாக பல சுற்றுவட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையிலே முதலாளிமார் சம்மேளனம் ஒரு ஒருமைப்பாட்டிற்கு வராததன் காரணமாக நாங்கள் சம்பள நிர்ணய சபையின் மூலமாக எமது பாட்டாளி மக்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு முயற்சித்தோம்.

கடந்த 10 ம் திகதி இடம்பெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் அதனை புறக்கணித்ததையிட்டு எங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம். 

நாங்கள் எதிர்ப்பார்த்தோம் இன்று 24 ம் திகதி நடைபெறுகின்ற இந்த சம்பள நிர்ணய சபைக்கு பொறுப்புடன் இந்த முதலாளிமார் சம்மேளனம் கலந்து கொள்ளும் என எதிர்பார்த்தோம்.

ஆனால் இன்றும் அதை புறக்கணித்து உள்ளனர். இது சம்பந்தமாக தற்போது நான் அதிமேதகு ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தேன். தொடர்ந்தும் நான் நினைக்கின்றேன் இந்த பாராளுமன்ற பதவியோ வெறு எந்த பட்ட பதவியோ வைத்துக் கொண்டு இந்த மக்களுடன் இணைந்து அவர்களுடைய ஒருமைக்காக போராடுவது ஒரு சிறந்த விடயமாக எனக்கு தெரியவில்லை. 

எதிர்வரும் ஒன்றாம் திகதி மே தினம் தொழிலாளர் தினம் இந்த தொழிலாளர் தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிலாளர் தினம் அன்று சிக்காக்கோ நகரிலே 8 மணித்தியால வேலையை கட்டாயப்படுத்தி தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராடியதன் பயனாக தான் இன்று நாடு முழுவதும் உலகம் முழுவதும் மே தினம் கொண்டாடப்படுகின்றது.

ஆகவே மேதினத்திற்கு முன்பாக இதற்கு சரியான தீர்வு கிட்டா விட்டால் அதாவது தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1750 ரூபாய்க்கும் மேலாக கொடுப்பனவை வழங்காத பட்சத்திலே எங்களுக்கு இன்னும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. நான் மே மாதம் 2 ம் திகதி ஆகும் போது எனது அனைத்து பதவிகளில் இருந்தும் நான் ராஜினாமா செய்து என்னுடைய தொப்புள் கொடி உறவுகளுடன் தோளோடு தோள் நின்று தோட்டம் தோட்டமாக என்னுடைய மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் மாவட்டம் மாவட்டமாக இறங்கி முழுமையாக என்னை அர்ப்பணித்து தொழிற்சங்க போராட்டத்தில் என்னுடைய தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்காக போராடுவதற்கு தீர்மானித்துள்ளேன்.

 

 

  • 1

VIDEOS

Recommended