• முகப்பு
  • இலங்கை
  • நினைவுகளின் தேரோட்டம்’ நூலை தமிழகப் பேராசிரியர் கு. சின்னப்பன் வெளியீட்டு வைப்பு

நினைவுகளின் தேரோட்டம்’ நூலை தமிழகப் பேராசிரியர் கு. சின்னப்பன் வெளியீட்டு வைப்பு

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Apr 26, 2024, 10:43:17 AM

மறைந்த எழுத்தாளர் மருதூர் கொத்தனின் கட்டுரைத் தொகுப்பான 'நினைவுகளின் தேரோட்டம்' என்ற நூல் அண்மையில் கண்டியில் வெளியிடப்பட்டது.மலையக கலை கலாசார சங்கம் நடத்திய இவ் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக இந்திய தமிழ் நாடு, தஞ்சாவூர் பல்கலைக்கழக பேராசிரியர் கு. சின்னப்பன் கலந்து கொண்டார். 

original/img-20240426-wa0025
அவர் தமது உரையில் தெரிவித்தாவது-

தமிழர்களதும், இஸ்வாமியா்களதும் நினைவுகளை வெளிப்படுத்தும் தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தின் ஒரு வடிவமாக இதனை நான் நோக்கு கிறேன். இக்கட்டுரைகளின் சொந்தக்காரன் மறைந்து 20 வருடங்கள் கடந்த நிலையில் இவ் ஆக்கம் வெளியிடப்படுவது அதன் முக்கியத்துவத்தையே காட்டுகிறது. 

கல்வியின் முக்கியத்துவம் பற்றி மறைந்த தென்னாபிரிக்க அறிஞர் நெல்சன் மண்டேலாவின் முன் உதாரணத்தை நாம் நோக்கலாம். அவர் சுமார் 28 வருடங்கள் சிறைவாசம் அபவித்தவர். அந்த 28 வருடங்களில் 26 வருடமாக அவர் வேண்டிக் கொண்டது தமது மக்களது விடுதலை பற்றியும் தனக்கு சிறையில் வாசிக்க புத்தகங்களும் வேண்டும் என்பதையுமே அவர் கோரிக்கையாக விடுத்து வந்தார்.

original/img-20240426-wa0024இது கல்வியின் முக்கியwத்துவத்தை காட்டுகிறது. கல்வியைக் கொடுத்தால் அதனைக் கொண்டு ஏனைய எல்லா வளங்களையும் தேடிக் கொள்ள முடியும் என்பதே இதன் உண்மையாகும் என்று அவர் தெரிவித்தார். 

இவ்வைபவத்தில் உரையாற்றி பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சுதர்ஷன் தெரிவித்தாவது-

எழுத்தாளர்களின் படைப்புக்களை அச்சு வாகனமேற்றி வெளியிக் கொணர்வது எழுத்தாளனின் பொறுப்பு மட்டுமல்ல, சமூகத்தினதும் பொறுப்பாகும். ஏனெனில் ஒரு நூலை அச்சுடுவதற்கு செலவாகும் பணத்தை விட பல மடங்கு செலவு அந்நூலை வெளியியிடுவதற்கு செலவாகும். எழுத்தாளனின்பொருளாதாரம் இதற்கு டையாக உள்ளது. எல்லா எழுத்ததாளர்களாலும் எழுத முடியும். ஆனால் அதனை வெளியியிட முடியாது. எனவே அவற்றை முறையாகத் தொகுத்து வெளியிடும் இது போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது.

அந்த அடிப்படையில் இதுவரை கண்டில் வைத்து மருதூர் கொத்தனின் இரண்டு நூல்கள் அவர் மறைந்த பின்பு கூட வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிலைமைகளை நாம் சமூகத்தில் உருவாக்க வேண்டும் என்றார். 

பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியற் துறைப் பேராசிரியர் பி.எம்.ஜமாஹிர் உற்பட மற்றும் பலர் உரையாற்றினர்.

  • 3

Recommended