பெண்களுக்கு புத்துணர்வு ஊட்டும் இலவச உடற்பயிற்சிகள்

ஏசுராஜ்

UPDATED: Apr 23, 2024, 7:39:22 PM

உடற்பயிற்சி என்ற வார்த்தை, இப்போது ரொம்பவே டிரெண்டாகி இருக்கிறது. இளம் வயதினர் மட்டுமின்றி, நடுத்தர வயதினரும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஏனெனில் அந்தக் காலத்தில், நாம் செய்த வேலைகள், ஆடிய விளையாட்டுகளே நம் உடலுக்குப் போதுமான பயிற்சிகளாக அமைந்திருந்தன.

ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நடன உடற்பயிற்சி இலவசமாக கற்றுக் கொடுக்கும் தஞ்சை மானஸா என்கிற தனலட்சுமி  பேசியதாவது:

பெண்கள் கல்லூரி  மாணவிகள், குழந்தைகள்,ஆகியோருக்கு  நடன உடற்பயிற்சி மற்றும் தன்னம்பிக்கை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்துறையில் நடன உடற்பயிற்சி 15 வருடங்களாக மிகச் சிறப்பாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் 2001 ல் லதா ரஜினிகாந்த் அவர்களிடம் சில்வர் மெடல் பாராட்டு  பெற்றுள்ளேன்

கலாம் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாளர் என்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன். மற்றும் கின்னஸ் உலக சாதனையிலும் தடம் பதித்து உள்ளேன்.

மேலும் சிங்கப்பெண்  விருது ; Doctor of Business ; women empowerment award ; Dr. APJ அப்துல் கலாம் விருது ; best professional award ; best aerobic Trainer ; கவிபாரதி  விருது ; பன்முக பாவை விருது ; அன்னை தெரசா விருது ; கல்பனா சாவ்லா விருது போன்றவைகளும் மேலும்  ஐ நா பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப்பில் மாவட்ட தலைவராகவும் என்று பல அமைப்புகளில் சாதித்து உள்ளேன்.

ஆசிரியர் பணியே இறைப்பணி என்பதால்  ஒருசில பள்ளியில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது

நடனப் பயிற்சி பயன்கள்: 

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன ஆரோக்கியம் உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின்  அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கவலைகள் நீங்கும்.

பி.சி.ஓ.டி (PCOD), தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஹார்மோன் சமநிலையின்மையால் உடல் எடை அதிகரிக்கும். உடற்பயிற்சியால் மட்டுமே அவர்களின் உடல் எடையைக் குறைக்க முடியும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்களுக்கு ஏற்படும் முதுகுவலியைச் சரிசெய்ய உடற்பயிற்சிகள் மிக அவசியம்.

மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க கால்சியம், வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகள் செய்வதும் மிக அவசியம்.

எங்களது மானஸா அகாடமி நிறுவனம் ISO தர சான்றிதழ் பெற்றது.

தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக எட்டுத்தொகை பத்துப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்  போன்ற நூல்களையும் மற்றும் திருக்குறள், கவிதைகள் ஆகிய குறிப்பிட்ட நேரத்தில் ஒப்புவித்தல் 

மேலும் அவரவருக்கு இருக்கும் தனித்திறமையை விளையாட்டு படிப்பு ஆன்மீகம் எதுவாயினும் வயது வர மின்றி பங்கேற்க செய்து அவர்களுக்கு குழுவாக உலக சாதனை படைக்க வாய்ப்பினை தேடி தருவதோடு தன்னம்பிக்கை தான் முதலில் என்று மனதை தயார்ப்படுத்தி  கொடுக்கிறேன்.

இது மட்டுமின்றி தஞ்சை மாநகராட்சி இணைந்து விழிப்புணர்வுகாக   மீண்டும்  மஞ்சப் பை என்ற தலைப்பில் மஞ்சப் பை வடிவில் 1000 மேற்பட்டோர் கலந்து பொது மக்கள் மாணவர்கள் மேயர் ஆணையர் மத்தியில் கலாம் உலக சாதனை மிகச் சிறப்பாக நிறைவேறியது. 

மீண்டும் மஞ்சப் பை மீண்டும் ஒருமுறை அரசின் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியில் நடைபெற்றது அரசு சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ் பல்கலை கழகத்துடன் இணைந்து சரபோஜி கல்லூரி மாணவர்கள் குந்தவை கல்லூரி மாணவர்கள் தமிழ் பல்கலை கழக மாணவர்கள் மற்றும் பாரத் கல்வி மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் ஓவிய கழுகு பார்வை  உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இது மட்டுமின்றி ஊனமுற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள் புத்தகங்கள் வழங்குதல் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவ்வப்போது விருது வழங்கும் விழா நடத்தி வருகிறோம்.

தன்னம்பிக்கை தான் மூலதனம் கலாம் அவர்களின் ஒரு வரி கவிதை  கனவு காணுங்கள்!

நினைவுகளை நிஜமாக்க கொஞ்சம் தன்னம்பிக்கை உடன் ஓடினால் போதுமானது!! 

பண கஷ்டமும் நஷ்டமும் துவண்டு போகுமோ மனதில் கனவுகளை நினைத்தால் கரைந்து போகுமோ ! மானஸா பயணம்!! சாதனை பயணம்!! மாற்றத்திற்கான பயணம்!! என கூறினார்.

 

VIDEOS

Recommended