• முகப்பு
  • இலங்கை
  • முஸ்லிம் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்த தியாகி மர்ஹூம் மௌலவி ஏ எல் எம் இப்ராஹிம் நினைவு பேருரை

முஸ்லிம் சமூகத்துக்காக தன்னை அர்ப்பணம் செய்த தியாகி மர்ஹூம் மௌலவி ஏ எல் எம் இப்ராஹிம் நினைவு பேருரை

அஷ்ரப். ஏ. சமத்

UPDATED: Apr 24, 2024, 2:08:00 AM

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஏற்பாட்டில் மர்ஹூம் மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹீம் அவர்கள் பற்றிய நினைவுப் பேருரை  செவ்வாய்க்கிழமை  கொழும்பு 7 ல் உள்ள இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது

original/439515328_10225875367170683_1556684562887852130_n
அஷ்ஷேக“ எம்.எச்.எம். உஸைர் தலைவர் இலங்கை ஜாமஅத்தே இஸ்லாமி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

நினைவுரைகளை- மெளலவி அஜ்வத்துல் அக்பர் முன்னாள் தலைவர் ஜமாத்தே இஸ்லாமி, பேராசிரியர் பி.ஏ.ஹூஸைன்னியா. ரவுப் ஹக்கீம், தலைவர் ஸ்ரீ.ல.மு.கா. அஷ்சேக் அர்கம் நுார் ஹாமித் பேராசிரியர் தம்மிக்க ஜயசிங்க ருஹூனு பல்கலைக்கழகம் , அமினா ஹாசீம் (முன்னாள் விரிவரையாளர் பேரதெனிய பல்கலைக்கழகம், ) கலாநிதி சலிம் அரபுத்துறைத் துறை தலைவர், பேராதெனிய பல்கலைக் கழகம், புவாட் செயலாளர் ஆயிஷா சித்திக்கியா மகளிர் கல்லுாரி, ,ரைசா ஆதம்பாவா, விரிவுரையாளர்,யுனானி வைத்தியத்துறை, கொழும்பு பல்கலைக்கழகம். முஜாஹிரா இப்ராஹீம் (மகள்) ஆகியோறும் உரையாற்றினார்கள்.

original/439032782_10225875358170458_1293077330854986179_n
காலம் சென்ற இப்றாஹீம் மௌலவி அவர்கள்- ஓர் அரபுத் துறை விரிவுரையாளர் பேராதெனிய பல்கலைக்கழக தலைவராக இலங்கை ஜாமத்தே இஸ்லாமியில் இணைந்து நீண்ட காலமாக கடமையாற்றினார் , உப தலைவராக , அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிலும் கடமை புரிந்தார், மற்றும் மாதம்பே இஸ்லாஹியா அரபுக் கல்லுாரி, புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபுக் கல்லூரி, திஹாரியில் அமைந்துள்ள சிங்கள மொழி தன்வீர் அகடமி, ஆகிய கல்வி நிறுவனங்களை அமைப்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

அத்துடன் ஹெம்மாத்துகமையில் சிறுவர் இல்லம், ஒன்றை நிறுவினார் . அவர் சுனாமி காலத்தில், விடுதலைப்புலிகள் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம். மற்றும் செரந்தீப்,போன்ற நிறுவனங்களை நிறுவி, முஸ்லிம் சமூகத்திற்கு சேவையாற்றினார்.

அவர் இஸ்லாமிய மத சம்பந்தமான விரிவுரைகள், தமிழ் ,சிங்கள மொழிகளில் நுால்களையும் அழகான மொழியில் எழுதி வெளியிட்டிருந்தார். குர்ஆணை அச்சிட்டு சிறிய விலையில் மக்களுக்கு விநியோகித்தார் இஸ்லாம் மதம் தனியே ஒரு சமுகத்திற்கு மட்டுமல்லாமல் சகலரும் அறிந்துக் கொள்ளக்கூடிய வழிவகைகளையும் ஏனைய சமுகத்தினருக்கும் அறியக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தினார்  

குர்ஆன் தப்சீரை சிங்களமொழி மூலம் வெளியிட்டார். இன ஜக்கிய செயற்றாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். நாம் சொந்தக் காலில் நிற்றல் வேண்டும். என்ற அர்த்தத்துடன் தனது மாணவர்களையும் வளிப்படுத்தினார். அத்துடன் முஸ்லிம் பெண்கள் தமது வரையரைக்குள் இருந்து கல்வியில் முன்னேறுவதற்கும் பெரிதும் பாடுபட்டார்.

அவர் அல்ஹசனாத் என்ற பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து அதன்ஆசிரியராகவும் பனிபுரிந்தார்.

அவர் 15 வருடகாலமாக தலைவராக இருந்த ஜாமஆத் இஸ்லாமி தன்னை விட 22 வயது குறைந்த ஒருவரிடம் தலைமைப் பொறுப்பினை ஒப்படைத்து அத் தலைவரின் கீழ் இருந்து அவர் பணியாற்றினார். ஜமாத்தே இஸ்லாமி க்காக தலைமைக் கட்டிடமொன்றையும் அமைப்பதற்கு அவர் அயராது பாடுப்ட்டார் . மறைந்த இப்பராஹிம் மௌலவி அவர்கள்.

ஒருபோதும் தனது கடமைகளுக்காக சம்பளம் பெறமாட்டார். மற்றும் சாதாரணமாக அவர் கடமைக்காக பஸ்சிலேயே எழிமையாக பயணம் மாகி தமது கடமைகளை மேற்கொள்வார் என பலரும் அவர் சிறப்புக்களை அங்கு உரையாற்றினார்கள்.

  • 1

VIDEOS

Recommended