நீண்ட கால தேவை நிறைவேறியது ஒளியானது சம்புக்களப்பு
ஜெமீல் அகமட்
UPDATED: May 5, 2024, 4:12:09 AM
அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதி என்பது விவசாய மக்களின் உயிர் மூச்சாக இருக்கும் போது இவ்வீதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது அதற்கு காரணம் யானைகளின் அட்டகாசத்தால் பலர் பாதிக்கப்பட்டு மரணமும் அடைந்துள்ளனர்.
இந்த வீதியால் இரவு நேரங்களில் மக்கள் பயணிக்க முடியாது யானைகளின் தொல்லை என்பது நீண்ட கால பிரச்சனை என்பது அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்த விடயமாகும் ஆனால் எவரும் கண்டு கொள்ளவில்லை அதிலும் அட்டாளைச்சேனை மக்களை காலத்துக்கு காலம் ஏமாற்றி அந்த மக்களின் வாக்குகளை சூரையாடி அதிகாரங்களை கைப்பற்றி சொகுசாக வாழும் முஸ்லிம் கட்சி கூட இந்த வீதியால் செல்லும் மக்களின் உயிரை பாதுகாக்க கூட ஏற்பாடுகள் செய்யவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்
இந்நிலையில் ஆலங்குள வீதிக்கு மிலாத் நகர் வரை வழங்கப்பட்டு இருந்தும் சம்புநகர் வரை மின்சாரம் வழங்கப்படவில்லை அதனால் விடுபட்ட மின்சார தொடர்பை சம்புநகர் வரை இனைத்து ஒளியுட்டி பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என நௌஸாத், ஹாரூன் ஆகியோரின் தலைமையில் மக்களின் தொடர் முயற்சியால் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் A L M அதாவுல்லாஹ் அவர்களிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு பிரதேச சபையின் நிதியுதவியால் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர் A L M அதாவுல்லஹ் அவர்கள் முன் மொழிந்த போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதேச சபையின் செயலாளர் M I M பாயிஸ் அவர்கள் தன்னால் முடிந்த உதவியை சபையின் ஊடாக செய்வதாக கூறினார்
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் A L M அதாவுல்லாஹ் அவர்களின் உத்தரவுக்கு ஏற்ப பிரதேச சபையின் நிதியுதவியுடன் மில்லாத் நகரிலிருந்து சம்புக்களப்பு வரை நேற்று (04 ) மின்சாரம் வழங்கி பாதை ஒளிமயமாக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
இந்த மின்சார இணைப்பு சிறு தூரம் என்றாலும் கடுகு சிறிது காரம் பெரிது என்பது போல் மக்களால் மறக்க முடியாத மிகவும் பெறுமதியான சேவை என்று தான் கூற வேண்டும்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் M I M . பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் A L M அதாஉல்லஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் U L A அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் S L M ஹனிபா, அட்டாளச்சேனை உதவி பிரதேச செயலாளர் நஜிஹா முஸாபீர், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் A L A அனிஸ், பள்ளிவாசல் செயலாளர் M S M ஜௌபர் ( PRO ) மற்றும் அம்பாறை மாவட்ட பிரதேச சபையின் செயலாளர்கள் ஆகியோர் விஷேட அதிதியாகவும், கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் நீண்ட கால தேவையாக இருந்த இவ்வீதிக்கு மின்சாரம் வழங்க முயற்சி செய்த அனைவருக்கும் இவ் வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதுடன்
தற்போது மின்சாரம் இல்லாமல் இருக்கும் சம்புக்களப்பு சம்புநகர் இடையே விரைவில் மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.