நீர்தேக்க தீவுகளில் காட்டுக் குரங்குகள் கைவிடப்படுவதாக விவசாயிகள் அதிருப்தி
கண்டி நிருபர் - ஜே.எம்.ஹாபீஸ்
UPDATED: Dec 23, 2024, 1:22:12 PM
கண்டி மாவட்டத்தில் உள்ள நீர்த்தேங்களை அண்மித்த காடுகளிலும், நீர்தேக்க தீவுகளிலும் நகரப் பிரதேச குரங்குகள் கைவிடப்படுவதால் அவை கிராமங்களுக்கு மத்தியில் வந்து பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டி நகரம், தெல்தெனிய, கலகெதர, ஹாரிஸ்பத்துவ, மெதமஹநுவர, உடதும்பறை, வேரபிட்டிய, கடுகன்னாவ, பிலிமத்தலாவ, போன்ற சன நடமாட்டம் கொண்ட இடங்களில் உள்ள குரங்களே இவ்வாறு நீரதேக்கங்ளை அண்மித்த தீவுகளில் விடப்படுவதாகக் கூறுகின்றனர். இதனால் தாம் உற்பத்தி செய்துள்ள பப்பாசி, தென்னை, தூரியன், மங்குஸ்தான், மா, காய்கறிகள் போன்றவற்றிற்கு குரங்குகள் பாரிய அளவில் சேதம் ஏற்படுத்தி வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேற்படிவிலங்குகளை மலடாக்கும் திட்டத்திற்குப் பதில் தாம் பிரச்சினையில் இருந்து தப்பிக் கொள்ளும் வகையில் இவ்வாறு வேறு இடங்களில் உள்ள குரங்குகளை தமது விவசாயப் பிரதேசங்களுக்கு கொண்டு வந்து கைவிடுகி்ன்றனர். இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறான தற்காலிக தீர்வுகளுக்குப் பதில் நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.